தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் 2025 – 2026-ம் ஆண்டுக்கான 16 வயதுக்குட்பட்டோருக்கான வீரர்கள் தேர்வை வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி சென்னை சேப்பாக்கம் ‘பி’ கிரவுண்டில் நடத்த உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புவர்கள் 2009-ம் ஆண்டு செப்டம்பர் 1 அல்லது அதற்கு பிறகு மற்றும் 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 31 அன்று அல்லது அதற்கு முன் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
இந்த தகுதியுடையவர்கள் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் இணையதள பக்கத்துக்கு சென்று அங்கு கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கில் தேவையான விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இன்று காலை 10 மணி முதல் வரும் 28-ம் தேதிமாலை 6 மணி வரை பதிவு செய்யலாம். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் இ-மெயிலில் வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். அவர்கள் குறிப்பிட்டுள்ள தேதியில் தேர்வில் கலந்துகொள்ளலாம்.