கான்வே 227, டாம் லேதம் 137 ரன்கள் விளாசல்: நியூஸிலாந்து அணி 500+ ரன்கள் குவிப்பு

0
25

மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ரான கடைசி மற்​றும் 3-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யின் முதல் நாள் ஆட்​டத்​தில் நியூஸிலாந்து அணி ஒரு விக்​கெட் இழப்​புக்கு 334 ரன்​கள் குவித்து மிரட்​டியது. டாம் லேதம், டேவன் கான்வே சதம் விளாசினர்.

மவுண்ட் மவுங்​க​னி​யில் உள்ள பே ஓவல் மைதானத்​தில் நேற்று தொடங்​கிய இந்த டெஸ்ட் போட்​டி​யில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்​டிங்கை தேர்வு செய்​தது. தொடக்க வீரர்​களான கேப்​டன் டாம் லேதம், டேவன் கான்வே ஜோடி எந்​த​வித சிரமமும் இல்​லாமல் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​யின் பந்து வீச்சை நிதான​மாக எதிர்​கொண்டு ரன்​கள் சேர்த்​தனர்.

டாம் லேதம் 183 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 9 பவுண்​டரி​களு​டன் தனது 15-வது சதத்தை கடந்​தார். அதேவேளை​யில் டேவன் கான்வே 147 பந்​துகளில், 17 பவுண்​டரி​களு​டன் தனது 6-வது சதத்தை விளாசி​னார். மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​யின் பந்​து​வீச்​சாளர்​களுக்கு கடும் அழுத்​தம் கொடுத்த இந்த ஜோடி 86.4-வது ஓவரில்​தான் பிரிந்​தது.

டாம் லேதம் 246 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 15 பவுண்​டரி​களு​டன் 137 ரன்​கள் எடுத்த நிலை​யில் கேமர் ரோச் பந்​தில் சிலிப் திசை​யில் நின்ற ராஸ்​டன் சேஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்​ட​மிழந்​தார். டாம் லேதம், டேவன் கான்வே ஜோடி முதல் விக்​கெட்​டுக்கு 323 ரன்​கள் குவித்​தது. இதையடுத்து ஜேக்​கப் டஃபி களமிறங்​கி​னார்.

முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் நியூஸிலாந்து அணி 90 ஓவர்​களில் ஒரு விக்​கெட் இழப்​புக்கு 334 ரன்​கள் குவித்​தது. டேவன் கான்வே 279 பந்​துகளில், 25 பவுண்​டரி​களு​டன் 178 ரன்​களும், ஜேக்​கப் டஃபி 9 ரன்​களும் சேர்த்து களத்​தில் இருந்​தனர்.

கைவசம் 9 விக்​கெட்​கள் இருக்க இன்று 2-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்தது நியூஸிலாந்​து அணி. இரண்டாம் நாளின் தேநீர் நேர் இடைவேளையின் பொது 6 விக்கெட் இழப்புக்கு 508 ரன்கள் எடுத்துள்ளது. டஃபி 17, கேன் வில்லியம்சன் 31 ரன்களில் வெளியேறினர். 367 பந்துகளில் 227 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் கான்வே. தொடர்ந்து மிட்செல் மற்றும் டாம் பிளெண்டல் ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.

இரண்டாம் நாள் தேநீர் நேர இடைவேளையின் போது நியூஸிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 508 ரன்கள் எடுத்துள்ளது. ரச்சின் ரவீந்திரா 38 மற்றும் கிளீன் பிலிப்ஸ் 28 ரன்கள் உடன் களத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here