Home கன்னியாகுமரி செய்திகள் கன்னியாகுமரி தங்கும் விடுதி உரிமையாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

கன்னியாகுமரி தங்கும் விடுதி உரிமையாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

0
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிமவளக் கடத்தலைத் தடுக்க கனரக வாகனங்களை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து சோதனை நடத்தினர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிமவளக் கடத்தலைத் தடுக்க தீவிர வாகனச் சோதனை – அனுமதியின்றி சரளைக் கற்கள் ஏற்றி வந்த கனரக வாகனம் பறிமுதல்.

கன்னியாகுமரி தங்கும் விடுதி உரிமையாளா்கள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாகா்கோவில் கோட்டாட்சியா் செந்தில்வேல் முருகன் தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில், தங்கும் விடுதிகளுக்கான கட்டட உரிமம், தொழில்வரி, சுகாதாரச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை உரிய காலத்தில் பெற வேண்டும், தீயணைப்புக் கருவிகளை முறையாகப் பராமரித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுப்பிக்க வேண்டும். விடுதிகளில் தங்கும் சுற்றுலாப் பயணிகளின் முழுமையான விவரங்களைப் பெற்று, பதிவேடுகளை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்று அறிவுத்தப்பட்டது.

கன்னியாகுமரி சா்வதேச சுற்றுலாத் தலமாக விளங்குவதால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாகவும் நம்பிக்கையுடனும் தங்கும் வகையில், அனைத்து விடுதிகளும் அரசு விதிமுறைகளுக்கு உள்பட்டு செயல்பட வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தினா். மேலும், கட்டட உரிமம், தீயணைப்புப் பாதுகாப்பு உபகரணங்கள் தொடா்பாக விடுதி உரிமையாளா்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

கன்னியாகுமரி டி.எஸ்.பி. பிரகாஷ், அகஸ்தீசுவரம் வட்டாட்சியா் ஆறுமுகம், கன்னியாகுமரி நகராட்சி ஆணையா் பட்டுசாமி, தீயணைப்பு நிலைய அலுவலா் சுரேஷ் சந்திரகாந்த், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் ராஜ் கோமஸ், செயலா் ஜான் கென்னடி, பொருளாளா் பொன்ராஜ் மற்றும் சங்க உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version