நவோதயா பள்ளிகளை தொடங்க மத்திய அரசுடன் ஆலோசியுங்கள்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

0
16

தமிழகத்​தில் நவோதயா பள்​ளி​களை தொடங்க அனும​திக்​கு​மாறு சென்னை உயர் நீதி​மன்​றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசின் சார்​பில் தாக்​கல் செய்த மேல்​முறை​யீடு மனுவை உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் பி.​வி. நாகரத்​னா, ஆர்.மகாதேவன் அடங்​கிய அமர்வு நேற்று விசா​ரித்​தது.

தமிழக அரசின் சார்​பில் மூத்த வழக்​கறிஞர் பி.வில்​சன் ஆஜராகி, ”ஜவஹர் நவோதயா பள்​ளி​களில் மும்​மொழிக் கொள்கை பின்பற்றபடு​கிறது. ஆனால் தமிழக அரசு இரு​மொழி கொள்கையை சட்​ட​மாக்​கி​யுள்​ளது” என வாதிட்டார்.

அப்​போது நீதிப​தி​கள், ”ஜவஹர் நவோதயா பள்​ளி​கள் விவகாரத்தை மொழிப் பிரச்​சனை​யாக மாற்​றக் கூடாது. நாம் கூட்டாட்சி அமைப்​பில் வாழ்​கிறோம். குடியரசின் ஒரு பகு​தி​யாக தமிழகம் உள்​ளது. ஓரடி முன்​னேறி​னால், மத்​திய அரசும் ஓரடி முன்​னால் வரும்.

ஜவஹர் நவோதயா பள்​ளி​களை திணிப்​பாக பார்க்​காமல், மாநில மாணவர்​களுக்​கான வாய்ப்​பாக பார்க்க வேண்​டும். மாநில அரசின் மொழிக் கொள்கை இது​தான் என்று மத்​திய அரசிடம் கூறுங்​கள், அது குறித்து ஆலோசனை நடத்துங்கள்” என்று உத்தரவிட்​டு வி​சா​ரணை​யை தள்​ளிவைத்​தனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here