கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட தோவாளை வடக்கூர் மாதவநகர் 2வது தெருவில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நேற்று (நவம்பர் 20) தொடங்கி வைக்கப்பட்டது. இந்த பணியினை தோவாளை ஊராட்சி மன்ற தலைவர் நெடுஞ்செழியன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணைத் தலைவர் தாணு உட்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது, கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க ஊராட்சி மன்ற தலைவர் நெடுஞ்செழியன் அறிவுறுத்தினார்.














