நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி அமித்ஷா, அம்பேத்கரை தரக்குறைவாக பேசிய தாகவும் அவரை கண்டித்தும் காங்கிரஸ் கட்சி சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன் நேற்று (டிசம்பர் 19) ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் தங்கராஜ், சிவ பிரபு, முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் ஜார்ஜ், விவசாய அணி பொதுச் செயலாளர் ஆதிலிங்க பெருமாள், மாவட்ட துணைத் தலைவர்கள் சிவசாமி, கிறிஸ்டோபர் உள்பட பலர் கலந்துகொண்டு கோஷம் எழுப்பினர்.














