“சபாநாயகரை காங்கிரஸ் எம்.பி.க்கள் திட்டினர்” – கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு

0
9

மக்​களவை சபா​நாயகர் ஓம் பிர்​லாவை காங்​கிரஸ் எம்​.பி.க்​கள் திட்​டிய​தாக​ நாடாளு​மன்ற விவ​காரங்​கள் துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜு கூறி​னார்.

மக்​களவை​யில் கடந்த 2ம் தேதி, முன்​னாள் ராணுவத் தளபதி எம்.எம்.நரவனே​வின் வெளி​யிடப்​ப​டாத நூலின் பகு​தி​களை அடிப்படை​யாக கொண்ட ஒரு கட்​டுரை பற்றி பேச காங்​கிரஸ் தலை​வர் ராகுல் காந்​திக்கு சபா​நாயகர் அனு​மதி மறுத்​தார். அப்போது முதல், மக்​களவை​யில் அமளி ஏற்​பட்டு வரு​கிறது.

எதிர்க்​கட்​சிகளின் அமளி காரண​மாக பிப்​ர​வரி 4ம் தேதி, குடியரசுத தலை​வர் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்​மானத்​தின் மீதான விவாதத்​திற்கு பிரதமர் நரேந்​திர மோடி​யால் பதில் அளிக்க முடிய​வில்​லை. பிப்​ர​வரி 5ம் தேதி பிரதமரின் வழக்​க​மான உரை இல்​லாமல் நன்றி தெரிவிக்​கும் தீர்​மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்​நிலை​யில் நாடாளு​மன்ற வளாகத்​தில் அமைச்​சர் கிரண் ரிஜிஜு நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: சபா​நாயகர் அறைக்​குள் காங்​கிரஸ் எம்​.பி.க்​கள் 20- 25 பேர் சென்​ற​போது நானும் சென்​றேன். அவர்​கள் சபா​நாயகரை திட்​டினர். அவர்​கள் பயன்​படுத்​திய வார்த்​தைகளை என்​னால் சொல்ல முடி​யாது. அப்போது கே.சி. வேணுகோ​பால், பிரி​யங்கா காந்தி போன்ற காங்கிரஸ் மூத்த தலை​வர்​கள் இருந்​தனர். அவர்​கள் அதை தடுக்க​வில்​லை. மாறாக ஊக்​கப்​படுத்​தினர்.

சபா​நாயகர் மிக​வும் மென்​மை​யானவர். இல்​லை​யெனில் அவர் கடுமை​யான நடவடிக்கை எடுத்​திருக்​கலாம். சபா​நாயகரின் உத்தரவை ராகுல் பின்​பற்​று​வ​தில்​லை. சபா​நாயகர் அனு​மதி வழங்​கா​விட்​டால், எந்த உறுப்​பினரும் பேச முடி​யாது. பிரதமர் கூட சபா​நாயகரின் அனு​ம​தி​யுடன் பேசுகிறார். எல்​லா​வற்​றை​யும் பொது​வில் விவா​திக்க வேண்​டும் என்​றால், நாட்​டின் பாது​காப்பை எவ்​வாறு பராமரிக்க முடி​யும் ?

நாட்​டின் பாது​காப்பு விஷ​யங்​களில் ஒரு குழந்​தையைப் போல நடந்து கொள்​ளக்​கூ​டாது. அரசி​யல் லாபத்​துக்காக ஒரு​வரின் கண்ணி​யத்தை குறைப்​பது சரியல்ல. ராகுல் காந்தி அம்பலப்படுத்​தப்​பட்​டார். அவர் அம்​பலப்​படுத்​தப் ​பட்ட பிறகு நான் எந்​தக் கருத்​தை​யும்​ கூறத்​ தேவை​யில்​லை. இவ்​வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here