நீச்சல் குளங்களில் குளிப்பதை தவிர்க்க காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் வேண்டுகோள்

0
51

காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஊடக நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: கேரளாவில் மூளையை தின்னும் அமீபா குறித்த செய்தி மிகவும் வருத்தமடைய செய்துள்ளது. பொது நீர்நிலைகளில் குளிப்பதன் மூலம் பலர் இந்த கொடிய வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். வேறு ஏதாவது தீர்வு கிடைக்கும் வரை நீச்சல் குளங்களில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.

சில நீர் ஆதாரங்கள் பாதுகாப்பாக இருந்தபோதிலும் சுத்திகரிக்கப்படாத இயற்கை நீர்நிலைகளில் அச்சுறுத்தல் உள்ளது. அங்கே அமீபா பாதிப்பு இருப்பதாக கருதுகிறேன். கடல்நீர், மென்னீர் நல்லது. உங்கள் வீட்டு தண்ணீர் பாதுகாப்பானது. குளோரினேட்டட் செய்யப்பட்ட நீச்சல் குளத்தின் நீர் நல்லது. நன்னீரில் குளிப்பது பாதுகாப்பானது அல்ல. இவ்வாறு சசி தரூர் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் இந்த ஆண்டு தொடக்கம் முதல் 69 பேர் மூளையை தின்னும் அமீபா எனப்படும் அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (PAM) நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 19 பேர் இறந்தனர். செப்டம்பர் 12 -ம் தேதி நிலவரப்படி, மாநிலத்தில் 52 பேர் மூளையை தின்னும் அமீபாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here