டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் துறை பிராந்தியத் தலைவர் மருத்துவர் சவுந்தரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெண்கள் தான் சமூகத்தின் அடித்தளம்.
அவர்களுக்கு பேறு காலத்தின் போதும், மன அழுத்தம் ஏற்படும் போதும் உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனை கவனிக்கவில்லை எனில், பார்வையில் தெளிவின்மை, இரட்டை பார்வை, பார்வைத் திறன் பாதிப்புகள் உள்ளிட்டவை உருவாகும். டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் துறை பிராந்தியத் தலைவர் மருத்துவர் சவுந்தரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெண்கள் தான் சமூகத்தின் அடித்தளம்.
அவர்களுக்கு பேறு காலத்தின் போதும், மன அழுத்தம் ஏற்படும் போதும் உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனை கவனிக்கவில்லை எனில், பார்வையில் தெளிவின்மை, இரட்டை பார்வை, பார்வைத் திறன் பாதிப்புகள் உள்ளிட்டவை உருவாகும்.
உரிய காலத்தில் பரிசோதனை
அதேபோல், மாதவிடாய் சுழற்சி காலம் நின்றுவிட்டவர்களுக்கும், ஹார்மோன் சுரப்பதில் குறைபாடு ஏற்பட்டு நரம்பு சார்ந்த பாதிப்புகள் பெண்களுக்கு ஏற்படலாம். அதனால், அவர்களுக்கு உரிய காலத்தில் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
அதனை கருத்தில் கொண்டும், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டும், டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவ குழுமம் சார்பில், டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகளில் பெண்களுக்கு இலவச கண் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுகிறது.
https://www.dragarwal.com/womens-day-2026/ என்ற இணையதளம் மூலம் டிஜிட்டல் முறையில் பரிசோதனை முகாமில் பங்கேற்கலாம். மேலும், 90038 88444 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.
எங்களுடைய மருத்துவ குழுவினர், அவர்களை தொடர்பு கொண்டு வரும் 31-ம் தேதிக்குள் அருகில் உள்ள டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் இலவச பரிசோதனைகள் மேற்கொள்ள தேவையான ஏற்பாடுகளை செய்ய தயாராக உள்ளனர். இவ்வாறு மருத்துவர் சவுந்தரி தெரிவித்து உள்ளார்.














