காஸ் விலை உயர்வை திரும்பப்பெற கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

0
18

மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​: சமையல் காஸ் சிலிண்​டர் விலை ரூ.60 உயர்த்​தப்​பட்​டுள்​ளதால், சங்​கி​லித் தொடர் போல உணவுப் பொருட்​களின் விலை பல மடங்கு உயரும்.

பெட்​ரோலி​யம் சார்ந்த அனைத்து எண்​ணெய் பொருட்​களின் மீதும் இதன் தாக்​கம் இருக்​கும்.

ஈரான் மீது அமெரிக்​கா, இஸ்​ரேல் இணைந்து நடத்​தும் போர் காரண​மாக சிலிண்​டர், பெட்​ரோல் உள்​ளிட்ட எந்த எரிபொருளுக்​கும் தட்​டுப்​பாடு, இருக்​காது என பாஜக​வினர் பேசி வந்த நிலை​யில் சிலிண்​டருக்கு ரூ.60 உயர்த்​தி​யிருப்​பது கண்​டனத்​துக்​குரியது. விலை உயர்வை உடனடி​யாக திரும்​பப்​பெற வேண்​டும்.

இ.கம்​யூ. மாநிலச் செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன்: போர் காரணமாக, காஸ் சிலிண்​டர் விலையை எண்​ணெய் விற்​பனை நிறு​வனங்​கள் உயர்த்​திக் கொண்டதை, மத்​திய அரசு உடனடி​யாகத் திரும்​பப் பெற வேண்​டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here