கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி தேவஸ்தானம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா தாளாளர் ராஜகுமார் தலைமையில் நடந்தது. தலைவர் குமரேசதாஸ் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் நாராயணன் அறிக்கை வாசித்தார். சி.பி.எஸ்.சி பள்ளி முதல்வர் சுனில்குமார், பி.எட் கல்லூரி முதல்வர் பிரியா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது: உலகிலே இந்தியாவில் அதிக இளைஞர்கள் உள்ளதால் சர்வதேச நிறுவனங்களின் கிளைகள் அதிகம் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியான விஷயமாகும். இதனால் ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.
மாணவர்கள் நன்கு கற்று தங்களுடைய மூளை அறிவை பயன்படுத்தி சம்பளத்தை நிர்ணயம் செய்துகொள்ள வேண்டும். மாணவர்கள் சிறு வயதிலிருந்தே திட்டமிட்டு பாடங்களை படிக்க வேண்டும். நேர்மறையான சிந்தனைகளுடன், ஒழுக்கத்துடன் கல்வி கற்று சாதிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து பிளஸ் டூ வகுப்பிலும், பத்தாம் வகுப்பிலும் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தங்க நாணயம் பரிசு வழங்கப்பட்டது. துணை முதல்வர் சந்தோஷ்குமார் நன்றி கூறினார்.














