தொழுவத்தை சுத்தம் செய்தால் புற்றுநோய் குணமாகும்: உ.பி. அமைச்சரின் சர்ச்சை கருத்து

0
216

லக்னோ: பசு தொழுவத்தை சுத்தம் செய்து, அங்கேயே படுத்துறங்கி வந்தால் புற்றுநோய் குணமாகும் என உ.பி. அமைச்சர் சஞ்சய் சிங் கங்குவார் கூறியுள்ளார்.

உத்தரபிரதேச பாஜக அரசில் கரும்பு வளர்ச்சித் துறைக்கான அமைச்சராக இருப்பவர் சஞ்சய் சிங் கங்குவார். இவர் தனது பிலிபித் தொகுதிக்குட்பட்ட பகாடியாஎன்றஇடத்தில் பசு காப்பகத்தை நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “ரத்த அழுத்த நோயாளிகள் தினமும் காலை, மாலை இருவேளையும் பசுவின் முதுகில் செல்லமாக தடவிக் கொடுக்க வேண்டும். அவ்வாறு தடவிக் கொடுத்தால் ரத்த அழுத்த மருந்துகளின் அளவை 10 நாட்களுக்குள் பாதியாகக் குறைக்கலாம். அதாவது ஒருவர் ரத்த அழுத்தத்திற்கு 20 மி.கிராம் மருந்தை எடுத்துக் கொண்டால், 10 நாட்களுக்கு பிறகு 10 மி.கிராம் எடுத்துக்கொண்டால் போதும்.

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பசு தொழுவத்தை சுத்தம் செய்வதுடன் அங்கேயே படுத்துறங்கி வந்தால் புற்று நோய் குணமாகும். பசு சாணத்தை (வறட்டி) எரிப்பதன் மூலம் கொசுக்களை ஒழிக்க முடியும். எனவே பசு மூலம் உருவாகும் அனைத்து பொருட்களும் ஏதோ ஒரு வகையில் நமக்கு பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அமைச்சர் சஞ்சய் சிங் கங்குவார் கூறினார். அவரது கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் கங்குவார் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மக்கள் தங்கள் திருமண நாள் மற்றும் குழந்தைகளின் பிறந்த நாளை பசு காப்பகத்தில் கொண்டாட வேண்டும். பசுக்களுக்கு உணவளிக்க வேண்டும்’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here