காஞ்சிபுரம்: சாம்சங் நிறுவனத்தின் சிஐடியு தொழிலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அனைவரும் பணிக்கு திரும்புவது என்று முடிவு செய்யப்பட்டது.
இந்தக் கூட்டத்துக்கு சிஐடியு அமைப்பின் தலைவர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். சிஐடியு மாநிலச் செயலர் முத்துக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். சிஐடியு தொழிலாளர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் போராட்டத்தை கைவிட்டு தொழிலாளர்கள் அனைவரும் பணிக்கு திரும்புவது என்று முடிவு செய்தனர். சிஐடியு நிர்வாகிகள் தமிழகஅமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து அனைவரும் பணிக்கு திரும்புவதாக முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.