‘விஸ்வம்பரா’ டீஸரில் இடம்பெற்றது ஏஐ காட்சிகள் என்று இயக்குநரின் தந்தை அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி வெளியானது ‘விஸ்வம்பரா’ படத்தின் டீஸர். இந்த டீஸரின் காட்சிகள் இணையத்தில் கடும் எதிர்வினைகளை சந்தித்தது. இந்த எதிர்வினையினால் பொங்கலுக்கு வெளியாக வேண்டிய படமும் தள்ளிவைக்கப்பட்டது. இதன் கிராபிக்ஸ் காட்சிகள் அனைத்துமே மாற்றப்பட்டு வருகின்றன.
இதனிடையே, இப்படத்தின் இயக்குநர் வாஷிஸ்டாவின் தந்தை பேட்டியொன்று அளித்துள்ளார். அதில் ‘விஸ்வம்பரா’ படத்தின் டீஸரில் இடம்பெற்றவை ஏஐ காட்சிகள் என்று தெரிவித்துள்ளார். மேலும், கிராபிக்ஸ் காட்சிகள் தாமதமானதால், ஏஐ தொழில்நுட்பத்தில் அவை உருவாக்கப்பட்டதாக கூறியிருக்கிறார்.
’பிம்பிசாரா’ படத்தின் இயக்குநர் வாஷிஸ்டா அடுத்து இயக்கி வரும் படம் ‘விஸ்வம்பரா’. இதில் சிரஞ்சீவி, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனை பெரும் பொருட்செலவில் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.