முதல்வர் ஸ்டாலினுக்கு அமெரிக்காவில் உற்சாக வரவேற்பு

0
246

அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலினுக்கு இந்திய துணை தூதர் ஸ்ரீகர் ரெட்டி, மற்றும் அமெரிக்கா வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழகத்துக்கு அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்கவும், படித்த இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், மேலும் பல புதிய தொழில்களை தமிழகத்தில் உருவாக்கும் முயற்சியாகவும், முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னையில் இருந்து கடந்த 27-ம் தேதி இரவு விமானத்தில் புறப்பட்ட அவர், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மாகாணத்துக்கு நேற்று காலை சென்றடைந்தார். மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் சென்றுள்ளார்.

விமான நிலையத்தில் அமெரிக்கா வாழ் தமிழ் மக்கள் பெருந்திரளாக கூடி நின்று, முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சான் பிரான்சிஸ்கோவுக்கான இந்திய துணை தூதர் ஸ்ரீகர் ரெட்டி, தமிழக தொழில் துறை அமைச்சர் டிஆர்பி. ராஜா, முன்னாள் மத்திய அமைச்சர் நெப்போலியன் உள்ளிட்டோரும் முதல்வரை வரவேற்றனர் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here