சென்னை கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு, மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 9-ம் தேதி இரவு அமைந்தக்கரையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், முன்னேற்றம் ஏற்படுவதாகவும் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், முதல்வர் விஜய் நேற்று மருத்துவமனைக்கு சென்று வி.எஸ். பாபுவை சந்தித்து நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும், உடல்நிலை முன்னேற்றம் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
