சென்னை: மருத்துவ சிகிச்சைக்கு வந்த என்ஆர்ஐயிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்

0
11

பட்​டினப்​பாக்​கம் பேருந்து பணிமனை அருகே தேர்தல் பறக்​கும் படை​யினர் நேற்று முன்​தினம் இரவு வாகன தணிக்​கை​யில் ஈடு​பட்​டனர்.

அப்​போது, அந்த வழி​யாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை​யிட்​ட​தில், அதில் பயணித்​தவரிடம் உரிய ஆவணங்​கள் இன்றி ரூ.1.50 லட்​சம் இருந்​த​தால், பறக்​கும் படை​யினர் பறி​முதல் செய்து விசா​ரித்​தனர்.

இதில், பணத்​துடன் பிடிபட்​ட​வர் மியான்​மரில் வசிக்​கும் வெளி​நாடு வாழ் இந்​தி​ய​ரான ராஜு என்​பதும், ஆர்​.ஏ.புரத்​தில் உள்ள மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெறு​வதற்​காக பணம் கொண்டு வந்​ததும் தெரிய​வந்​தது. இருப்​பினும், பணத்​துக்​கான ஆவணங்​கள் இல்​லாத​தால் அந்த பணம் அரசு கரு​வூலத்​தில் ஒப்படைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here