சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வருவாய் கடந்தாண்டு அதிகரிப்பு

0
15

சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்​தின் வரு​வாய் 2024–25-ம் நிதி​யாண்​டில், கட்​ட​ணம் தவிர்த்து இதர பிரிவு​களில் 30 சதவீதம் வரை அதி​கரித்​துள்​ளது. சென்​னை​யில் 2 வழித்​தடங்​களில் மெட்ரோ ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன.

3 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் தின​மும் பயணம் செய்​கின்​றனர். மெட்ரோ ரயில் நிறு​வனம் டிக்​கெட் கட்டண வரு​வாய் மட்​டுமின்​றி, இதர வழிகளி​லும் வரு​வாயை திரட்​டும் பணி​களை கடந்த சில ஆண்​டு​களாக மேற்​கொண்டு வரு​கிறது.

குறிப்​பாக, வாகன நிறுத்​தும் இடம் அதி​கரிப்​பு, மெட்​ரோவுக்கு சொந்​த​மான இடங்​களை தனி​யாருக்கு நீண்ட காலத்​துக்கு குத்​தகை விடு​வது, ரயில்​கள், ரயில் நிலை​யங்​களில் தனி​யார் விளம்​பரம் செய்ய அனு​ம​திப்​பது உட்பட பல்​வேறு வகை​களில் வருவாயை ஈட்​டு​கிறது.

இதனால் அந்​நிறு​வனத்​தின் வரு​வாய் கணிச​மாக அதி​கரித்து வரு​கிறது. இதற்​கிடையே, சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் 2024-25-ம் நிதி​யாண்​டின் அறிக்​கையை வெளி​யிட்​டுள்​ளது. அதன்​படி சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்​தின் மொத்த வரு​வாய் ரூ.369.49 கோடியி​லிருந்து ரூ.425.64 கோடி ஆக உயர்ந்​துள்​ளது.

இது 15 சதவீதம் அதி​க​மாகும். பயணக் கட்டண வரு​வாய் மட்​டுமின்​றி, இதர பிரிவு​களில் வரு​வாய் அதி​கரித்​துள்​ளது. இதர பிரிவு வரு​வாய் ரூ.104.30 கோடியி​லிருந்து ரூ.135.39 கோடி​யாக அதி​கரித்​துள்​ளது. இது 30 சதவீதம் அதி​க​மாகும்.

வரும் ஆண்​டு​களில் பயணி​கள் எண்​ணிக்​கை​யும், இதர பிரிவு​களில் பயன்​பாடு​களும் அதி​கரிக்​கும் என்​ப​தால், வரு​வாய் மேலும் அதி​கரிக்​கும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here