பசுமை நகராட்சி நிதிப்பத்திரம் மூலம் தேசிய பங்குச்சந்தையில் ரூ.205 கோடி நிதி: சென்னை மாநகராட்சி தகவல்

0
21

தேசிய பங்குச் சந்தையில் பசுமை நகராட்சி நிதிப் பத்திரம் வாயிலாக சென்னை மாநகராட்சி ரூ.205.59 கோடி நிதி திரட்டி உள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது: சென்னை மாநகராட்சியின் ரூ.200 கோடி மதிப்புள்ள நகர்புறநிதிப் பத்திரங்கள் கடந்த ஆண்டு மே மாதம் தேசிய பங்குச்சந்தை பட்டியலில் சேர்க்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது தனது முதல் பசுமை நகராட்சி நிதிப் பத்திரத்தை ஜன.12-ம் தேதி தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிட உள்ளது.

கட்டமைப்பு, மேம்பாடு திட்டம்: இந்த நிதிப் பத்திரம் மூலம் சென்னை மாநகராட்சி ரூ.205.59 கோடி நிதி திரட்டியுள்ளது. இந்த நிதிப் பத்திரம் சென்னை மாநகராட்சியின், நிலையான நகர்புர வளர்ச்சி மற்றும் பருவநிலை மாற்றத்துக்கேற்ற உள் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்துக்கான நிதி ஆதாரங்களை திரட்டும்.

இவ்வாறு திரட்டப்பட்ட நிதி, மாநகராட்சி மேற்கொண்டு வரும் முக்கிய சுற்றுச்சூழல் உள்கட்டமைப்பு திட்டமான கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில், பயோ மைனிங் மற்றும் மீட்டுருவாக்கம் பணிகளுக்காக பயன் படுத்தப்படும்.

இந்த திட்டத்தின் மொத்த செலவு ரூ.648.38 கோடி ஆகும். இதில் சென்னை மாநக ராட்சியின் பங்குத் தொகை ரூ.385.64 கோடி. மாநகராட்சியின் இந்த பங்குத் தொகையிலிருந்து ரூ.205.59 கோடி தொகைக்கு பசுமை நகராட்சி நிதிப் பத்திரங்கள் மூலம் சென்னை மாநகராட்சி 10 ஆண்டு காலத்துக்கு, ஆண்டுக்கு 7.95 சதவீதம் என்ற மிகவும் குறைந்த வட்டி விகிதத்தில் நகர்புற நிதிப் பத்திரங்கள் திரட்டப்பட்டுள்ளன. இதற்கு முதலீட்டாளர்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பு கிடைத் துள்ளது.

ஊக்கத்தொகை ரூ.20 கோடி: மேலும், மத்திய அரசின் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் நகர்புற பசுமை நிதி பத்திர வெளியீட்டு ஊக்கத்தொகையாக மாநகராட்சிக்கு ரூ.20 கோடி ஊக்கத் தொகையும் பெறப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here