Home மாநில செய்திகள் சென்னை | மின்சார ரயில் சேவையில் இன்று மாற்றம்

சென்னை | மின்சார ரயில் சேவையில் இன்று மாற்றம்

0

சென்னை எழும்பூர் – விழுப்புரம் மார்க்கத்தில், சிங்கப்பெருமாள்கோவில் யார்டில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், 12 மின்சார ரயில்களின் சேவையில் இன்று (11-ம் தேதி) மாற்றம் செய்யப்பட உள்ளது. இதன்படி, சென்னை கடற்கரை – செங்கல்பட்டுக்கு இன்று காலை 8.31, 9.02, 9.31, 9.51, 10.56 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், சிங்கப்பெருமாள் கோவில் – செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்படும்.

காஞ்சிபுரம் – சென்னை கடற்கரைக்கு இன்று காலை 9.30 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், செங்கல்பட்டு – காஞ்சிபுரம் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டு – கும்மிடிப்பூண்டிக்கு இன்று காலை 9.55 மணி, செங்கல்பட்டு – சென்னை கடற்கரைக்கு காலை 10.40, 11, முற்பகல் 11.30, நண்பகல் 12, மதியம் 1.10 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது பகுதி மற்றும் முழுமையாக ரத்து செய்யப்படும் மின்சாரரயில்களுக்கு பதிலாக, சிறப்பு பயணிகள் ரயில்கள் இன்று இயக்கப்படும்.

காட்டாங்குளத்தூர் – கும்மிடிப்பூண்டிக்கு காலை 10.13 மணி, காட்டங்குளத்தூர் – சென்னை கடற்கரைக்கு காலை 10.46, 11, முற்பகல் 11.20, நண்பகல் 12.20, செங்கல்பட்டு – சென்னை கடற்கரைக்கு முற்பகல் 11.30, மதியம் 1.10 மணிக்கு சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படும். இத்தகவல் சென்னை ரயில்வே கோட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version