பஹல்காம் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்: கணவனை இழந்த இளம்பெண் ராணுவம், என்ஐஏ.வுக்கு நன்றி

0
15

காஷ்மீரின் பஹல்​காமில் கடந்த ஏப்​ரல் 22-ம் தேதி, பாகிஸ்​தான் தீவிர​வா​தி​கள் தாக்​குதல் நடத்​தி​ய​தில், சுற்​றுலா பயணி​கள் 26 பேர் உயி​ரிழந்​தனர்.

இதுதொடர்​பாக தேசிய புல​னாய்வு முகமை (என்​ஐஏ) வழக்​குப் பதிந்து பலரை கைது செய்​தது. தாக்​குதலில் ஈடு​பட்ட தீவிர​வா​தி​கள் சுட்​டுக் கொல்​லப்​பட்​டனர்.

இந்த வழக்​கில் என்ஐஏ நேற்​று​முன்​தினம் 1,597 பக்​கங்​கள் கொண்ட குற்​றப் பத்​திரி​கை​யைத் தாக்​கல் செய்​தது. பஹல்​காமில் தீவிர​வா​தி​கள் தாக்​குதல் நடத்​தி​ய​தில் உத்தர பிரதேச மாநிலம் கான்​பூரைச் சேர்ந்த சுபம் திவிவேதி என்​பவரும் உயி​ரிழந்​தார்.

இந்​நிலை​யில், என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்​கல் செய்​துள்​ளதற்​கு, சுபமின் தந்தை சஞ்​சய் மற்​றும் சுபமின் இளம் மனைவி அய்​ஷன்யா திவிவேதி ஆகியோர் நன்றி தெரி​வித்​துள்​ளனர்.

இதுகுறித்து சஞ்​சய் கூறும்​போது, ‘‘மத்​திய அரசு தீவிர​வாதத்​துக்கு எதி​ரான நடவடிக்​கைகளை தொடர வேண்​டும். நாட்டு மக்​களும் தீவிர​வாதத்​துக்கு எதி​ராக இருக்க வேண்​டும்’’ என்​றார்.

சுபமின் மனைவி அய்​ஷன்யா திவிவேதி கூறும்​போது, ‘‘நமது மத்​திய அரசுக்​கும், ராணுவம், என்​ஐஏ.வுக்​கும் மனப்​பூர்​வ​மான நன்​றியை தெரி​வித்​துக் கொள்​கிறேன். குற்றப்பத்திரிகையில் தீவிர​வா​தி​களுக்கு உதவி, ஆதர​வளித்த காஷ்மீரி​களின் பெயர்​களும் சேர்க்​கப்​பட்​டுள்​ளது. அவர்​களுக்கு கடுமை​யான தண்​டனை வழங்க வேண்​டும்’’ என்​றார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here