மதுராந்தகம் அஹோபில மடம் சம்ஸ்கிருத கல்லூரியில் மத்திய சம்ஸ்கிருத பல்கலை. குழுவினர் ஆய்வு

0
155

ஆதர்ஷ் சம்ஸ்கிருத மகாவித்யா லயா திட்டத்தின்கீழ் தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக மத்திய சம்ஸ்கிருத பல்கலைக்கழக குழுவினர் மதுராந்தகம் அஹோபில மடம் சம்ஸ்கிருத கல்லூரியில் ஆய்வு செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சந்நிதி தெருவில்  அஹோபில மடத்தின் ஆதர்ஷ் சம்ஸ்கிருதகல்லூரி இயங்கி வருகிறது.  மாலோலன் கல்வி அறக்கட்டளையின் கீழ் செயல்படும் இக்கல்லூரியில் சிரோமணி (எம்ஏ), மத்யமாசிரோமணி (பிஏ), பிராக் சிரோமணி படிப்புகள் வழங்கப்படுகின்றன.

ஆதர்ஷ் சம்ஸ்கிருத மகாவித்யாலயா திட்டத்தின்கீழ் மத்திய சம்ஸ்கிருத பல்கலைக்கழகம் சம்ஸ்கிருத கல்லூரிகளுக்கு கல்விதரத்துக்கு ஏற்ப கிரேடு ஏ, பி, சி,டி என தர அந்தஸ்து வழங்குகிறது. தர அளவுக்கு ஏற்பகல்லூரிகளுக்குஆராய்ச்சிப் பணி, மற்றும் இதர மேம்பாட்டு பணிகளுக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், மத்திய சம்ஸ்கிருத பல்கலைக்கழகத்தின் த்வைத வேதாந்தத் துறை தலைவர் பேராசிரியர் நாராயண புஜார்தலைமையிலான உள் தரக்குழுவினர் மதுராந்தகம் அஹோபில மடம்சம்ஸ்கிருத கல்லூரியில் அண்மையில் ஆய்வு செய்தனர். இந்த குழுவில் தினகர் மராத்தே, லலித்கிஷோர் சர்மா ஆகியோர் உறுப் பினர்களாக இடம்பெற்றிருந்தனர்.

மத்திய சம்ஸ்கிருத பல்கலைக்கழக குழுவினரின் ஆய்வு குறித்துகல்லூரியின் முதல்வர் எஸ்.வரதகோபால கிருஷ்ணன் கூறும்போது, “நாங்கள் சமர்ப்பித்திருந்த சுய ஆய்வு அறிக்கையை மதிப்பீடு செய்வதற்காக மத்திய சம்ஸ்கிருத பல்கலைக்கழக தர குழுவினர் எங்கள் கல்லூரிக்கு வருகை தந்தனர்.

அவர்கள் கல்லூரியின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகம் தொடர்பான விவரங்களை அறியும் வகையில் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களுடன் கலந்துரையாடினர். நாங்களும் கல்லூரியின் செயல்பாடுகள், மற்றும் நிர்வாக முறைகளை அவர்களிடம் எடுத்துரைத்தோம்’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here