கரோனா காலத்தில் ஆப் மூலம் ரூ.1,000 கோடி முதலீட்டு மோசடி – 2 சீனர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு

0
17

கரோனா பேரிடரின்போது செல்போன் செயலி மூலம் ரூ.1,000 கோடி சுருட்​டிய வழக்​கில் 2 சீனர்​கள் மீது சிபிஐ வழக்​குப் பதிவு செய்​துள்​ளது.

இதுகுறித்து சிபிஐ அதி​காரி​கள் நேற்று கூறிய​தாவது: கரோனா பொது​முடக்​கத்​தின் போது ”எச்​பிஇசட் டோக்​கன்​ஸ்” என்ற போலி​யான செல்போன் செயலியைப் பயன்​படுத்தி பொது​மக்​களிட​மிருந்து ரூ.1,000 கோடி திரட்​டப்​பட்​டுள்​ளது. கிரிப்​டோ கரன்சி மற்​றும் அதிக வட்டி தரு​வ​தாக கூறி இந்த மோசடி நடை​பெற்​றது.

வெளி​நாட்டைச் சேர்ந்த பெரிய கும்​பல் சைபர் கிரைம் நெட்​வொர்க்கை பயன்​படுத்தி திட்​ட​மிட்டு இந்த மோசடி​யில் ஈடு​பட்​டது விசாரணையில் கண்​டறியப்​பட்​டது. இந்த சதித் திட்​டத்​துக்கு சீனாவைச் சேர்ந்த வான் ஜுன், லீ அன்​மிங் ஆகிய இரு​வரும் மூளை​யாக செயல்​பட்டுள்ளனர்.

தற்​போது அவர்​கள் இரு​வர் மீதும் குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. இதுத​விர மேலும் 25 தனி​நபர்​கள் மற்​றும் 30 நிறு​வனங்​களுக்கு எதி​ராக​வும் நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. இவ்வாறு அவர்​கள் தெரி​வித்​தனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here