சாதிவாரி கணக்கெடுப்பு காலக்கெடு நீட்டிப்பு: கர்நாடகாவில் பள்ளிகளுக்கு 10 நாள் விடுமுறை

0
24

கர்​நாட​கா​வில் சாதி​வாரி கணக்​கெடுப்பு பணி​களுக்​கான காலக்​கெடு நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. ஆசிரியர்​கள் இந்த பணி​யில் ஈடு​படு​வதற்​காக பள்​ளி​களுக்கு அக்​டோபர் 18ம் தேதி வரை விடு​முறை அளிக்​கப்​பட்டுள்ளது.

இதுகுறித்து கர்​நாடக முதல்​வர் சித்​த​ராமையா பெங்​களூரு​வில் கூறிய​தாவது: கர்​நாட​கா​வில் சமூக,கல்​வி,பொருளா​தார கணக்​கெடுப்பு பணி​கள் கடந்த செப்​டம்​பர் 22ம் தேதி தொடங்கி அக்​டோபர் 7ம் தேதி​யுடன் முடிக்க திட்​ட​மிடப்​பட்​டது. ஆனால் கணக்​கெடுப்பு பணி​கள் இன்​னும் முழு​மை​யாக நிறைவடைய​வில்​லை.

கொப்​பல் மாவட்​டத்​தில் 97 சதவீத​மும், உடுப்பி 63 சதவீத​மும், த‌ட்​சிண கன்னட மாவட்​டத்​தில் 60 சதவீத​மும் மட்​டுமே ப‌ணி​கள் முடிவடைந்​துள்​ளன. அனைத்து மாவட்​டங்​களி​லும் 100 சதவீதம் கணக்​கெடுப்பு முடிக்​கும் வகை​யில் அக்​டோபர் 17ம் தேதி வரை காலக்​கெடு நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது.

சாதி​வாரி கணக்​கெடுப்பு பணி​யில் 1.2 லட்​சம் ஆசிரியர்​கள், 40 ஆயிரம் இதர‌ பணி​யாளர்​கள் என ஈடு​பட்​டுள்​ளனர். இந்த பணி​யில் ஆசிரியர்​கள் முழு​மை​யான ஈடு​படும் வகை​யில் அரசு மற்​றும் அரசு உதவி பெறும் பள்​ளி​களுக்கு அக்​டோபர் 18ம் தேதிவரை விடு​முறை அளிக்​கப்​பட்​டுள்​ளது. அரை​யாண்டு தேர்​வு​களில் ஈடு​படும் ஆசிரியர்​களுக்கு இந்த கணக்​கெடுப்​புப் பணியி​லிருந்து விலக்கு அளிக்​கப்​படும்.

கணக்​கெடுப்​புப் பணி​யின் போது உயி​ரிழந்த 3 ஊழியர்​களின் குடும்​பங்​களுக்​குத் தலா ரூ.20 லட்​சம் இழப்​பீடு வழங்​கப்​படும். இந்த பணி​யில் பங்​கேற்​காத அரசு ஊழியர்​கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்​கப்​படும். இவ்​வாறு முதல்​வர் சித்​த​ராமை​யா தெரி​வித்​தார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here