திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்கா கந்தூரி விழாவுக்கு தடை கோரி வழக்கு: விசாரணை தள்ளிவைப்பு

0
12

திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள சிக்​கந்​தர் தர்கா கந்​தூரி விழாவுக்​குத் தடை கோரிய வழக்​கின் விசா​ரணையை ஜன. 2-ம் தேதிக்கு நீதிபதி தள்​ளி​வைத்​தார். மதுரை சோலை அழகுபுரத்​தைச் சேர்ந்த மாணிக்க மூர்த்​தி, உயர்​நீ​தி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் அமைந்​துள்ள சிக்​கந்​தர் பாதுஷா தர்​கா​வில் கடந்த ஆண்டு நடந்த கந்​தூரி விழா​வில் அசைவ உணவு​கள் பரி​மாறப்​பட்​டன.

இதற்கு எதி​ராக உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில், திருப்​பரங்​குன்​றம் மலை​யில் ஆடு, கோழிகளைப் பலி​யிட தடை விதிக்​க​வும், மலை​யில் அசைவ உணவு சமைக்​க​வும், பரி​மாற​வும் தடை விதிக்​கக்​கோரி வழக்​குத் தொடரப்​பட்​டது. இந்த வழக்​கு​களை விசா​ரித்த உயர் நீதி​மன்ற அமர்​வு, திருப்​பரங்​குன்​றம் மலை​யில் ஆடு, கோழி பலி​யிட தடை விதித்​தும், இந்த உரிமையை நிலை நாட்ட உரிமை​யியல் நீதி​மன்​றத்தை அணுக​வும் உத்​தர​விட்​டது.

இந்த உத்​தர​வுக்கு எதி​ராக தர்கா நிர்​வாகம் சார்​பில் மேல்​முறை​யீடு செய்​ய​வில்​லை. இதனால் உயர் நீதி​மன்ற அமர்வு உத்​தரவு இறு​தி​யானது. இந்​நிலை​யில், சிக்​கந்​தர் தர்காவில் கடந்த 21-ம் தேதி கந்​தூரி மற்​றும் சந்​தனக்​கூடு விழா தொடங்​கியது.

வரும் ஜன. 6-ம் தேதி வரை விழா நடை​பெறும் என்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​விழா​வில் ஆடு, கோழி பலி​யிட​வும், அசைவ உணவு சமைக்​க​வும் வாய்ப்​புள்​ளது.

எனவே, கந்​தூரி விழாவுக்​குத் தடை விதித்து உத்​தர​விட வேண்​டும். இவ்வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது. இந்த மனு நீதிபதி ஜோதி​ராமன் முன்​னிலை​யில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. பின்​னர் நீதிப​தி, மனு தொடர்​பாக தர்கா நிர்​வாகத் தரப்​பில் பதில் மனு தாக்​கல் செய்​யு​மாறு உத்​தர​விட்​டு, விசா​ரணையை ஜன. 2-ம் தேதிக்கு தள்​ளி​வைத்​தார்.

அப்​போது, “அது​வரை தற்​போதைய நிலை நீடிக்க உத்​தர​ விட வேண்​டும்” என மனு​தா​ரர் தரப்​பில் கோரிக்கை வைக்​கப்​பட்​டது. இதை ஏற்க மறுத்த நீதிப​தி, “ஜன. 6-ம் தேதி​தான் விழா நடை​பெறுகிறது. வழக்கு 2-க்கு தள்​ளிவைக்​கப்​பட்​டுள்​ளது. இதனால் மனு​தா​ரர் கோரும் நிவாரணத்தை வழங்க முடி​யாது” என்று உத்தர​விட்​டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here