முரசொலி அறக்கட்டளைக்கு எதிராக வழக்கு: சிபிஐ, தாழ்த்தப்பட்டோர் ஆணையம் பதில் அளிக்க உத்தரவு

0
22

முரசொலி அறக்​கட்​டளை நிர்​வாகம் சட்​ட​விரோத நடவடிக்​கை​களில் ஈடு​பட்​ட​தாக குற்​றம்​சாட்டி தொடரப்​பட்ட வழக்​கில் சிபிஐ, தேசிய தாழ்த்​தப்​பட்​டோர் ஆணை​யம் தரப்​பில் பதில் அளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

நெல்​லை​யைச் சேர்ந்த வழக்​கறிஞர் வெங்​க​டாஜலபதி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யுள்​ள​தாவது: முரசொலி அறக்​கட்​டளை​யின் அலு​வல​கம் பஞ்​சமி நிலத்தை ஆக்​கிரமித்து கட்​டப்​பட்​ட​தாக ஏற்​கெனவே குற்​றச்​சாட்​டு​கள் உள்​ளன.

இந்த நிலை​யில், ஆளுங்​கட்​சி​யின் அதி​கார பலத்​துடன் சட்​ட​விரோத நடவடிக்​கை​களி​லும் அறக்​கட்​டளை நிர்​வாகம் ஈடு​பட்​டுள்​ளது. அதற்கு சொந்​த​மான பல கோடி ரூபாய் பணம், விளம்​பரம் என்ற கணக்​கில் சட்​ட​விரோத​மாக செல​விடப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து சிபிஐ விசா​ரணைக்கு உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டிருந்​தது. தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி, நீதிபதி ஜி.அருள்​முரு​கன் அமர்​வில் இந்த மனு விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது, மனு​தா​ரர் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் தாமா சேஷாத்ரி நாயுடு, “முரசொலி அறக்​கட்​டளை​யின் சட்​ட​விரோத நடவடிக்​கைகள் குறித்து சிபிஐ விசா​ரணைக்கு உத்​தர​விட வேண்​டும்” என்​றார்.

முரசொலி அறக்​கட்​டளை தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் பி.​வில்​சன், “மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் ஏற்​கெனவே தேசிய தாழ்த்​தப்​பட்​டோர் ஆணை​யத்​தின் துணைத் தலை​வ​ராக இருந்​த​போது, அவரது தூண்​டு​தலின்​பேரில்​தான் முரசொலி அறக்​கட்​டளை அலு​வல​கம் பஞ்​சமி நிலத்​தில் இருப்​ப​தாக பொய் புகார் அளிக்​கப்​பட்​டது.

ஆனால், அது பஞ்​சமி நிலம் அல்ல என்​ப​தற்​கான அனைத்து ஆதா​ரங்​களை​யும், சம்​பந்​தப்​பட்ட ஆணை​யத்​தின் முன்பு நடந்த விசா​ரணை​யில் சமர்ப்​பித்​துள்​ளோம்.

தவிர, பொதுநல வழக்கு என்ற பெயரில் இந்த வழக்கை தொடர்ந்​துள்ள வழக்​கறிஞர் வெங்​க​டாஜலபதி நெல்லை மாவட்ட பாஜக நிர்​வாகி. அந்த உண்​மையை மறைத்து அரசி​யல் உள்​நோக்​கத்​துடன் வழக்கு தொடர்ந்​துள்​ளார்.

எனவே, இந்த வழக்கை அபராதத்​துடன் தள்​ளு​படி செய்ய வேண்​டும்” என்று வாதிட்​டார். இதையடுத்​து, மனு​தா​ரரின் குற்​றச்​சாட்டு குறித்து சிபிஐ, தேசிய தாழ்த்​தப்​பட்​டோர் ஆணை​யம், முரசொலி அறக்​கட்​டளை தரப்​பில் 2 வாரங்​களில் பதில் அளிக்க உத்​தர​விட்டு வி​சா​ரணை​யை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here