கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் நேற்று மாநகரில் பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடத்தினர். அப்போது மதுபோதையில் ஓட்டி வந்த 4 ஆட்டோக்கள், ஒரு வேன் மற்றும் ஒரு சொகுசு கார் உள்ளிட்ட 6 வாகன டிரைவர்கள் போலீசில் பிடிபட்டனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் விபத்து தடுப்பு நடவடிக்கையாக, குடிபோதையில் ஓட்டி வந்த வாகன டிரைவர்களின் ஓட்டுனர் உரிமத்தை கோர்ட்டு நடவடிக்கைகள் முடிந்த பிறகு வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் ரத்து செய்யவும் பரிந்துரை செய்யப்பட உள்ளது.














