Home மாநில செய்திகள் மேயர் – எம்எல்ஏ இடையே ‘மெழுகுவர்த்தி’ சர்ச்சை: பள்ளி கட்டிட திறப்பு விழாக்களில் அடுத்தடுத்து பரபரப்பு

மேயர் – எம்எல்ஏ இடையே ‘மெழுகுவர்த்தி’ சர்ச்சை: பள்ளி கட்டிட திறப்பு விழாக்களில் அடுத்தடுத்து பரபரப்பு

0

சென்னை மாநக​ராட்​சிக்கு உட்​பட்ட பகு​தி​களில் நடை​பெற்ற பள்ளி கட்​டிடத் திறப்பு விழாக்​களில், மேயர் ஆர்​.பிரியா மற்​றும் திருவிக நகர் எம்​எல்ஏ எம்​.ஆர்​.பல்​லவி ஆகியோ​ருக்கு இடையே ஏற்​பட்ட வெளிப்​படை​யான மோதல் அரசி​யல் வட்​டாரத்​தில் பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

சென்னை மாநக​ராட்​சி, திருவிக நகர் மண்​டலத்​துக்கு உட்​பட்ட பகு​தி​களில் புதி​தாக கட்​டப்​பட்ட பள்ளி கட்​டிடங்​களின் திறப்பு விழா நேற்று நடை​பெற்​றது.

இதில் மேயர் ஆர்​.பிரி​யா, திருவிக நகர் எம்​எல்ஏ எம்​.ஆர்​.பல்​லவி மற்​றும் கல்​வித்​துறை இணை ஆணை​யர் கற்​பகம் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர்.

முதலில் புளியந்​தோப்பு மன்​னார்​சாமி கோயில் தெரு​வில் உள்ள சென்னை உருது நடுநிலைப் பள்​ளி​யின் புதிய கட்​டிடம் திறந்து வைக்​கப்​பட்​டது. அப்​போது, மேயர் பிரியா ரிப்​பனை வெட்​டு​வதற்கு முன்​பாகவே, அவருக்கு பின்​னால் நின்​றிருந்த எம்​எல்ஏ பல்​லவி ரிப்​பனை வெட்​டி​னார்.

இதனைத் தொடர்ந்து வகுப்​பறை​யில் குத்​து​விளக்கு ஏற்​றும் நிகழ்ச்சி நடை​பெற்​றது. மேயர் பிரியா விளக்​கேற்​றிய பின், அடுத்​த​தாக நின்​றிருந்த எம்​எல்​ஏ-​விடம் மெழுகு​வர்த்​தியை வழங்​காமல், அவருக்கு அடுத்து நின்​றிருந்த ஐஏஎஸ் அதி​காரி கற்​பகத்​திடம் வழங்​கி​னார்.

இதனால் அதிர்ச்​சி​யடைந்த எம்​எல்ஏ பல்​ல​வி, அதிருப்​தி​யுடன் நிகழ்ச்​சி​யைப் பாதி​யிலேயே புறக்​கணித்​து​விட்டு அங்​கிருந்து வெளி​யேறி​னார்.

எம்​எல்​ஏ-வை அதி​காரி​கள் சமா​தானம் செய்​ததை அடுத்​து, நம்​மாழ்​வார்ப்​பேட்டை சின்​ன​பாபு தெரு​வில் நடை​பெற்ற அடுத்த பள்ளி கட்​டிடத் திறப்பு விழா​வில் அவர் பங்​கேற்​றார்.

இந்த விழா​வில், முந்​தைய சம்​பவத்​துக்கு சமா​தானம் செய்​யும் வகை​யில், மேயர் பிரியா விளக்​கேற்​றி​விட்டு மெழுகுவர்த்தியை எம்​எல்ஏ பல்​ல​வி​யிடம் நீட்​டி​னார். ஆனால், புளியந்​தோப்பு சம்​பவத்​துக்​குப் பதிலடி கொடுக்​கும் வித​மாக, எம்​எல்ஏ பல்​லவி அதனை வாங்க மறுத்​து​விட்​டார்.

அதி​காரி​கள் வற்​புறுத்​தி​யும் அவர் விளக்​கேற்ற முன்​வ​ராத நிலை​யில், அவரது ஆதர​வாளர்​கள் கைத்​தட்டி ஆரவாரம் செய்​தனர். ஒரே நாளில் அடுத்​தடுத்து நடை​பெற்ற இந்த இரு சம்​பவங்​களும் அங்​கிருந்​தவர்​களிடையே திகைப்பை ஏற்​படுத்​தி​யது.

தற்​போது இது தொடர்​பான வீடியோக்​கள் சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி வைரலாகி வரு​கின்​றன. இதுகுறித்து, எம்எல்ஏ பல்​லவி கூறுகை​யில், “மேயர் என்னை அவம​திக்​கும் எண்​ணத்​துடன்​தான் இந்த நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​றார்.

அவர் அவ்​வாறு நடந்து கொண்​ட​தில் எனக்கு எந்த வருத்​த​மும் இல்​லை” என்​றார். மேயர் பிரியா கூறுகை​யில், “அரசு நடை​முறைப்​படி, மேயர் என்ற அடிப்​படை​யில் முதலில் நான் குத்​து​விளக்​கேற்​றினேன்.

அதற்​குப் பிறகு ஐஏஎஸ் அதி​காரி​யும், அவரைத் தொடர்ந்து எம்​எல்​ஏ-​வும் விளக்​கேற்ற வேண்​டும். அந்த மரபு​தான் அங்​கும் பின்​பற்​றப்​பட்​டது. அவரை நாங்​கள் அவமரி​யாதை செய்​ய​வில்​லை. அவர்​தான் வேண்​டு மென்​றே பிரச்​சினையை ஏற்​படு​த்துகிறார்” என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version