கேண்டிடேட்ஸ் செஸ் தொடர்: 8-வது சுற்றில் பிரக்ஞானந்தா தோல்வி

0
19

சைப்​ரஸ் நாட்​டில் உள்ள பாஃ​போஸ் நகரில் கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆடவர் பிரிவு 8-வது சுற்​றில் இந்​திய கிராண்ட் மாஸ்ட​ரான ஆர்​.பிரக்ஞானந்தா, நெதர்​லாந்​தின் அனிஷ் கிரி​யுடன் மோதி​னார்.

இதில் பிரக்​ஞானந்தா 44-வது சுற்றின் போது தோல்வி அடைந்​தார். இந்த தோல்​வி​யால் கேண்​டிடேட்ஸ் தொடரில் சாம்​பியன் பட்​டம் வெல்​லும் பிரக்​ஞானந்​தா​வின் கனவுக்கு சிக்​கல் ஏற்​பட்​டுள்​ளது.

இந்​தத் தொடரில் சாம்​பியன் பட்​டம் வெல்​லும் நபரே இந்த ஆண்​டின் பிற்​பகு​தி​யில் நடை​பெறும் உலக சாம்​பியன் பட்​டம் வெல்​வதற்​கான ஆட்​டத்​தில் டி.கு​கேஷுடன் மோது​வார். 8 சுற்​றுகளின் முடி​வில் பிரக்​ஞானந்தா 3.5 புள்​ளி​களு​டன் 4-வது இடத்தை 3 பேருடன் பகிர்ந்​து​கொண்​டுள்​ளார்.

மகளிர் பிரி​வில் இந்​தி​யா​வின் திவ்யா தேஷ்​முக் 8-வது சுற்​றில் உக்​ரைனின் அனா முசிசுக்​குடன் மோதி​னார். இதில் திவ்யா தேஷ்​முக் 85-வது நகர்த்​தலின் போது வெற்றி பெற்​றார். இதன் மூலம் 4.5 புள்​ளிகளுடன் முதலிடத்தை அனா முசிசுக்​குடன் பகிர்​ந்​து​கொண்​டுள்​ளார் திவ்யா தேஷ்முக்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here