மின்சார ரயில்கள் ரத்து, நேரம் மாற்றம்: பிராட்வே – செங்கை இடையே கூடுதல் பேருந்துகள் இயக்கம்

0
216

மின்சார ரயில்கள் ரத்து, நேரம் மாற்றம் காரணமாக பிராட்வே-செங்கல்பட்டு இடையே கூடுதலாக மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு, திருமால்பூர், காஞ்சிபுரம், அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்களின் நேர அட்டவணையில் மாற்றம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த இடங்களிலிருந்து கடற்கரைக்கு வரும் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளதுடன் 28 ரயில்கள் தற்காலிகமாக ரத்தும் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, புதிய நேர அட்டவணை நேற்று முதல் அமலுக்கு வந்தது.

எனவே, மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் வழக்கம்போல் பிராட்வேயில் இருந்து தாம்பரம் வழியாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 10 பேருந்துகளும், தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலான வழித்தடத்தில் கூடுதலாக 10 பேருந்துகளும் என மொத்தம் 20 பேருந்துகள் பயணிகள் நலன் கருதி இயக்கப்படுகின்றன. மேலும் பயணிகளின் எண்ணிக்கை இவ்வழித்தடங்களில் அதிகரிப்பதைப் பொறுத்து கூடுதல் பேருந்துகளை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here