சுதேசி பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை

0
18

வரும் பண்​டிகை காலத்​தில் சுதேசி பொருட்​களை மட்​டுமே வாங்க வேண்​டும் என்று பிரதமர் மோடி அறி​வுறுத்தி உள்ளார். 126-வது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்​பானது.

இதில் பிரதமர் நரேந்​திர மோடி பேசி​ய​தாவது: தீபாவளிக்கு பிறகு சத் பண்​டிகை கொண்​டாடப்பட உள்​ளது. மத்​திய அரசின் முயற்சி​யால் கொல்​கத்​தா​வின் துர்கா பூஜை யுனெஸ்​கோ​வின் கலாச்​சார பட்​டியலில் சேர்க்​கப்​பட்​டது. இதே​போல சத் பூஜையையும் யுனெஸ்கோ பட்​டியலில் சேர்க்க முயற்சி மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது.

அக்​டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்​தியை கொண்​டாட உள்​ளோம். நமது தேசத்​தந்தை சுதேசி கொள்​கையை வலி​யுறுத்​தி​னார். அவற்​றில் காதி மிக​வும் முக்​கிய​மானது. ஆனால் துர​திர்​ஷ்ட​வச​மாக, சுதந்​திரத்​துக்​குப் பிறகு காதி மீதான ஆர்​வம் குறைந்​தது. மத்​திய அரசின் முயற்​சிகளால் கடந்த 11 ஆண்​டு​களாக காதி பொருட்​களின் விற்​பனை அதி​கரித்து வரு​கிறது. வரும் காந்தி ஜெயந்தி நாளில் குறைந்​த​பட்​சம் ஒரு காதி பொருளை வாங்க வேண்​டு​கிறேன்.

இதற்கு தமிழ்​நாட்டை சேர்ந்த யாழ் நேச்​சுரல்ஸ் ஓர் உதா​ரணம் ஆகும். அந்த நிறுவன உரிமை​யாளர்​கள் அசோக் ஜெகதீசன், பிரேம் செல்​வ​ராஜ் ஆகியோர் கார்ப்​பரேட் வேலையை துறந்து புதிய முயற்​சியை மேற்​கொண்​டனர். புற்​கள் மற்​றும் வாழை நார்​களி​லிருந்து யோகா பாய்​களை அவர்​கள் உரு​வாக்​கினர். மூலிகை சாயங்​களால் துணி​களுக்கு சாயம் பூசினர். இந்த புதிய முயற்சி மூலம் சுமார் 200 குடும்​பங்​களுக்கு அவர்​கள் வேலை​வாய்ப்பை வழங்கி உள்​ளனர்.

ஆர்​எஸ்​எஸ் அமைப்​புக்கு புகழாரம்: அடுத்த சில நாட்​களில் விஜயதசமியை கொண்​டாட உள்​ளோம். இந்த நாளில் ஆர்​எஸ்​எஸ் அமைப்பு 100-வது ஆண்டு விழாவை கொண்​டாடு​கிறது. பல நூற்​றாண்​டு​களாக இந்​தியா அடிமைத்​தனத்​தில் சிக்​கித் தவித்​தது. இந்த சூழலில் டாக்​டர் ஹெட்​கேவர் கடந்த 1925-ம் ஆண்டு விஜயதசமி நாளில் ராஷ்ட்​ரிய சுயம்​சேவக் சங்​கத்தை நிறு​வி​னார்.

அவரது மறைவுக்கு பிறகு பரம் பூஜ்ய குருஜி தேசத்​துக்கு சேவை செய்​யும் மகத்​தான பணியை முன்​னெடுத்து சென்​றார். கடந்த 100 ஆண்​டு​களாக ஆர்​எஸ்​எஸ் அமைப்பு இடை​வி​டா​மல் தேச சேவை​யில் ஈடு​பட்டு வரு​கிறது. ஆர்​எஸ்​எஸ் அமைப்​புக்​கும் அதன் தொண்​டர்​களுக்​கும் வாழ்த்​துகளைத் தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

வரும் பண்​டிகை காலத்​தில் சுதேசி பொருட்​களை மட்​டுமே வாங்க வேண்​டும். உள்​நாட்​டில் உற்​பத்தி செய்​யப்​படும் பொருட்​களை மட்​டுமே வாங்​கு​வேன் என்று ஒவ்​வொரு இந்​தி​யரும் உறு​தி​யேற்க வேண்​டும். நமது பாதை சுதேசி பாதை​யாக இருக்க வேண்​டும். அனைத்து துறை​களி​லும் நாம் சுய​சார்பை எட்ட வேண்​டும். பண்​டிகை நாளில் நமது வீடு​களை சுத்​தம் செய்​கிறோம். அதே​நேரம் நமது தெருக்​கள், சுற்​றுப்​புறங்​கள், சந்​தைகள், கிராமங்​கள், நகரங்​களை​யும் சுத்​தம் செய்​ய வேண்​டும்​. இது நமது தலை​யாய கடமை ஆகும்​. இவ்​வாறு பிரதமர் மோடி பேசி​னார்​.

கடற்படை அதிகாரிகளுடன் உரையாடல்: மன​தின் குரல் நிகழ்ச்​சி​யின்​போது பிரதமர் மோடி கூறும்​போது, “கடலில் சுமார் 50,000 கி.மீ. பயணம் செய்து கடற்​படை பெண் அதி​காரி​கள் தில்​னா, ரூபா சாதனை படைத்​துள்​ளனர். அவர்​கள் தங்​களது சாகச பயண அனுபவங்​களை நம்​மோடு பகிர்ந்து கொள்​வார்​கள்’’ என்​றார். புதுச்​சேரியை சேர்ந்த ரூபாவுடன் பிரதமர் பேசி​ய​போது தமிழில் வணக்​கம் கூறி​னார். இதைத் தொடர்ந்து லெப்​டினென்ட் கமாண்​டர் ரூபா அழகிரி​சாமி கூறிய​தாவது:

கடந்த 2017-ம் ஆண்டு கடற்​படை​யில் சேர்ந்​தேன். எனது தந்தை தமிழ்​நாட்டை சேர்ந்​தவர். அம்மா புதுச்​சேரியை சேர்ந்​தவர். விமானப் படை​யில் தந்தை பணி​யாற்​றி​னார். அவரை பின்​பற்றி நான் கடற்​படை​யில் இணைந்​தேன். பாய்மர படகில் இரு​வர் மட்​டுமே பயணம் செய்​தோம். 3 புயல்​களை​ எதிர்​கொண்​டோம்.

சில நேரங்​களில் 3 மாடி உயரத்​துக்கு அலைகள் எழுந்​தன. அந்த அலைகளை எதிர்​கொண்​டோம். உறைய​வைக்​கும் குளிர், கடுமை​யான வெப்​பம், சூறாவளி காற்றை சமாளித்​தோம். அண்​டார்​டி​கா​வில் பயணம் செய்​த​போது அங்கு வெப்​பநிலை ஒரு டிகிரி செல்​சி​யஸாக இருந்​தது. அண்​டார்​டிகா குளிரை சமாளிக்க 7 அடுக்கு ஆடைகளை அணிந்​தோம். இவ்​வாறு ரூபா அழகிரி​சாமி தெரி​வித்​தார்.

கடற்​படை லெப்​டினென்ட் கமாண்​டர் தில்னா கூறிய​தாவது: கடந்த 2014-ம் ஆண்​டில் கடற்​படை​யில் சேர்ந்​தேன். நான் கேரளா​வின் கோழிக்​கோட்டை சேர்ந்​தவள். எனது தந்தை ராணுவத்​தில் பணி​யாற்​றி​னார். எனது அம்மா இல்​லத்​தரசி. எனது கணவர் இந்​திய கடற்​படை​யில் பணி​யாற்​றுகிறார்.

கடந்த 2024 -ம் ஆண்டு அக்​டோபர் 2-ம் தேதி கோவா​வில் இருந்து கடல் பயணத்தை தொடங்கி கடந்த மே 29-ம் தேதி கரைக்கு திரும்​பினோம். 238 நாட்​கள் சுமார் 50,000 கி.மீ. கடலில் பயணம் செய்​தோம். பாயிண்ட் நீமோ​வில் தேசிய கொடியை ஏற்றி சாதனை படைத்​தோம். பாய்​மரப் படகில் அங்கு சென்ற முதல் இந்​தி​யர், முதல் ஆசி​யர் என்ற பெரு​மையை பெற்​றோம். இவ்​வாறு தில்னா பேசி​னார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here