கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நேற்று (பிப்.6) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பட்ஜெட் நகல் கிழிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள், நெசவாளர்கள், ஏழை நடுத்தர மக்களையும் தமிழகத்தையும் புறக்கணித்த மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து கோஷங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.














