கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆறுகாணி, பத்துகாணி, ஒருநூறாம்வயல், களியல் உள்ளிட்ட பல பகுதிகளில் பிஎஸ்என்எல் நெட்வொர்க் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒருநூறாம்வயல் பகுதியில் வீட்டின் உள்ளே தமிழக நெட்வொர்க்கும், வெளியே கேரள நெட்வொர்க்கும் கிடைப்பதால் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பேணு பகுதியில் டவர் இருந்தும் பயனில்லாமல் உள்ளதாகவும், களியல் சுற்றுவட்டாரத்தில் மின்சாரம் தடைபட்டால் பிஎஸ்என்எல் சேவை முற்றிலும் நின்றுவிடுவதாகவும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சனைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
