பிரிஸ்​பன் சர்​வ​தேச டென்​னிஸ்: அரினா சபலென்​கா, டேனியல் மெத்வ​தேவ் சாம்​பியன்

0
18

ஆஸ்​திரேலி​யா​வின் பிரிஸ்​பன் நகரில் பிரிஸ்பன் சர்வதேச டென்​னிஸ் தொடர் நடை​பெற்று வந்தது. இதன் மகளிர் ஒற்​றையர் பிரிவு இறுதி சுற்​றில் நேற்று முதல் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்​கா, 16-ம் நிலை வீராங்​க​னை​யான உக்ரைனின் மார்டா கோஸ்ட்​யுக்​குடன் பலப்​பரீட்சை நடத்தி​னார்.

ஒரு மணி நேரம் 17 நிமிடங்​கள் நடை​பெற்ற இந்த ஆட்டத்தில் அரினா சபலென்கா 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்​கில் வெற்றி பெற்று சாம்​பியன் பட்​டத்தை தக்​க​வைத்​துக் கொண்​டார். கடந்த ஆண்டும் அவர், இந்த தொடரில் வாகை சூடி​யிருந்​தார். ஒட்டுமொத்த​மாக சபலென்கா வெல்​லும் 22-வது பட்​டம் இது​வாகும்.

ஆடவர் ஒற்​றையர் பிரிவு இறு​தி​யில் ரஷ்​யா​வின் டேனியல் மெத்வ​தேவ், அமெரிக்​கா​வின் பிரண்​டன் நகஷி​மாவுடன் மோதினார். இதில் முன்​னாள் முதல் நிலை வீர​ரான டேனியல் மெத்​வ​தேவ் 6-2, 7-6 (7-1) என்ற செட் கணக்​கில் வெற்றி சாம்​பியன் பட்​டம் வென்​றார். ஒட்டுமொத்​த​மாக அவர், அவரது 22-வது பட்டமாக அமைந்​தது.

ஸ்விட்​டோலினா சாம்​பியன்:

நியூஸிலாந்​தின் ஆக்​லாந்து நகரில் ஏஎஸ்பி கிளாசிக் டென்​னிஸ் போட்டி நடை​பெற்று வந்​தது. இதில் மகளிர் ஒற்​றையர் பிரிவு இறுதிப் போட்​டி​யில் உக்​ரைனின் எலினா ஸ்விட்​டோலி​னா, சீனாவின் வாங் ஷின்​யுவை எதிர்​கொண்​டார். இந்த ஆட்​டத்​தில் எலினா ஸ்விட்​டோலினா 6-3, 7-6 (8) என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று கோப்​பையை வென்​றார். சர்​வ​தேச டென்​னிஸ் அரங்​கில் ஸ்விட்​டோலினா வென்ற 19-வது பட்டம் இதுவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here