நடிகை ஸ்ரீதேவியின் சொத்துக்கு மோசடி வாரிசு சான்றிதழ் மூலமாக 3 பேர் உரிமை கோருவதாக போனி கபூர் வழக்கு

0
83

நடிகை ஸ்ரீதேவி வாங்​கிய சொத்​துக்கு மோசடி​யான வாரிசு சான்​றிதழ் மூல​மாக 3 பேர் உரிமை கோரு​வ​தாக திரைப்​படத் தயாரிப்​பாள​ரும், நடிகை ஸ்ரீதே​வி​யின் கணவரு​மான போனி கபூர் தாக்​கல் செய்​திருந்த மனுவை விசா​ரித்த சென்னை உயர் நீதி​மன்​றம், இதுதொடர்​பாக தாம்​பரம் வட்​டாட்​சி​யர் விசா​ரித்து தகுந்த உத்​தரவை பிறப்​பிக்க உத்​தர​விட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் போனி கபூர் தாக்​கல் செய்​திருந்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: எனது மனை​வி​யும், நடிகை​யு​மான மறைந்த ஸ்ரீதே​வி, கடந்த 1988-ம் ஆண்டு சென்னை கிழக்கு கடற்​கரை சாலை​யில் ஒரு சொத்​தை, சம்​பந்த முதலி​யார் குடும்​பத்​தினரிடம் இருந்து விலைக்கு வாங்​கி​யிருந்​தார்.

கடந்த 37 ஆண்​டு​களாக அந்த சொத்தை நாங்​கள் அனுப​வித்து வரும் நிலை​யில், சம்​பந்த முதலி​யாரின் மகன் சந்​திரசேகரனின் வாரிசுகள் என கூறிக்​கொண்டு 3 பேர் மோசடி​யாக வாரிசு சான்​றிதழ் பெற்​று, எங்​களது சொத்​துக்கு உரிமை கோரி வரு​கின்​றனர். இந்த வாரிசு சான்​றிதழ் தாம்​பரம் வட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​தில் கடந்த 2005-ம் ஆண்டு மோசடி​யாக பெறப்​பட்​டுள்​ளது. இந்த வாரிசு சான்​றிதழை ரத்து செய்​யக்​கோரி நாங்​கள் அளித்த மனுவை அதி​காரி​கள் பரிசீலிக்​க​வில்​லை.

இது தொடர்​பாக நடவடிக்கை எடுக்க உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கோரி​யிருந்​தார். இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்​கடேஷ் முன்​பாக விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது போனி கபூர் அளித்​துள்ள மனு மீது விசா​ரணை நடத்​தப்​பட்​டு, விரை​வில் உத்​தரவு பிறப்​பிக்​கப்​படும் என அரசு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

அதைப்​ப​திவு செய்து கொண்ட நீதிப​தி, தங்​களது சொத்​துக்கு சிலர் மோசடி​யான வாரிசு சான்​றிதழ் மூல​மாக உரிமை கோரு​வ​தாக போனி கபூர் அளித்​துள்ள மனுவை விசா​ரித்து 4 வார காலத்​தில் தாம்​பரம் வட்​டாட்​சி​யர் தகுந்த உத்​தரவை பிறப்​பிக்​க ஆணையிட்டுள்​ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here