சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

0
100

சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்தில் சக்தி வாய்ந்த திரவ நிலை வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன என்று இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவன அலுவலகத்துக்கு நேற்று அதிகாலை இமெயில் வந்தது.

வெளிநாட்டிலிருந்து வந்த இந்த மிரட்டல் குறித்து உடனடியாக சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகம் மற்றும் போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை விமான நிலைய பாதுகாப்புக் குழு கூட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, சென்னை விமான நிலைய வெடிகுண்டு நிபுணர்கள், அதிரடிப் படையினர், மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனைகளில் ஈடுபட்டனர்.

சென்னையிலிருந்து அந்தமான், டெல்லி, மும்பை உள்ளிட்ட சில இடங்களுக்கு புறப்பட இருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்களிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இது வழக்கமான புரளி என்பதை பாதுகாப்பு அதிகாரிகள் உறுதி செய்தனர்.

இது தொடர்பாக சென்னை விமான நிலையப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here