Home மாநில செய்திகள் உயிரிழந்த 9 மீனவர் குடும்பத்துக்கு தலா ரூ.1.50 லட்சம் நிவாரணம் தர படகு உரிமையாளருக்கு உத்தரவு

உயிரிழந்த 9 மீனவர் குடும்பத்துக்கு தலா ரூ.1.50 லட்சம் நிவாரணம் தர படகு உரிமையாளருக்கு உத்தரவு

0

சென்னை காசிமேட்​டில் இருந்து மீன்​பி​டிக்கச் சென்ற மீனவர்​கள் 9 பேர் புயலில் சிக்கி உயி​ரிழந்​தனர். இது​தொடர்​பாக படகு உரிமையாளர் டி.செல்​வழகனை ராயபுரம் போலீஸார்கைது செய்​தனர். ஜாமீன் கோரி அவர் தாக்​கல் செய்த மனுவை விசா​ரித்த நீதிபதி வி.லட்​சுமி நாராயணன், மீனவர்​ குடும்​பத்​தினருக்கு நியாய​மான இழப்​பீடு வழங்க படகு உரிமையாள​ரை அறி​வுறுத்​தினார்.

இந்த வழக்கு நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது 9 மீனவர்​களின் குடும்​பத்​தினர் மற்​றும் செல்​வழகன் ஆஜராகினர். இறந்த மீனவர்​களின் வாரிசுகளு​டைய வயதுக்​கேற்ப இழப்​பீட்​டுத் தொகையை நிர்​ணயிக்க மூத்த வழக்​கறிஞர் சித்ரா நாராயணனை மத்​தி​யஸ்த​ராக நீதிபதி நியமித்தார்.

இதற்​கிடையே தலா ரூ. 2 லட்​சம் இழப்​பீடு வழங்க தயாராக இருப்​ப​தாக படகு உரிமையாளர் தரப்​பில் தெரி​விக்​கப்​பட்​டிருந்த​து. இடைக்​கால நிவாரண​மாக வழங்​கப்​பட்ட ரூ. 50 ஆயிரத்தை கழித்​துக் கொண்டு மீதமுள்ள ரூ.1.50 லட்சத்தை வழங்க படகு உரிமையாள​ருக்கு நீதிபதி உத்​தர​விட்​டார். பின்னர் அடுத்த விசா​ரணையை டிச.4-க்கு தள்​ளிவைத்​தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version