“தமிழகத்தில் பாஜகவின் சூழ்ச்சிகள் எடுபடாது” – திமுகவின் எழிலரசன் நேர்காணல்

0
12

காஞ்​சிபுரம் தொகுதி சட்​டமன்ற உறுப்​பினர் எழிலரசன், திமுக​வின் கொள்கை பரப்புச் செய​லா​ள​ராக​வும் உள்​ளார். பாரம்​பரிய​மான திமுக குடும்​பத்​தைச் சேர்ந்​தவர், தமிழக அரசி​யல் நில​வரம் குறித்து ‘இந்து தமிழ் திசை’​யிடம் அவர் பேசி​ய​தில் இருந்​து…

Q

திருப்​பரங்​குன்​றம் மலை​யில் தீபம் ஏற்​று​வது தொடர்​பான விவ​காரத்​தில் சர்ச்சை ஏன்? தமிழக அரசு மேற்​கொண்ட நடவடிக்​கை​கள் சரி​யான​தா?

A

ஏற்​கெனவே என்ன நடை​முறை​கள் உள்​ளதோ, எதைச் செய்​தால் சட்​டம் ஒழுங்கு பிரச்​சனை வராதோ அதை​தான் ஒரு மாநில அரசு அனு​ம​திக்​கும். புதி​தாக ஒரு பழக்​கத்தை கொண்​டு​வந்​து, அதன் மூலம் கலவரத்தை ஏற்​படுத்த நினைக்​கும் எந்​தச் செயல்​களை​யும் அனு​மதிக்க முடி​யாது. அந்த வகை​யில் தமிழக அரசு மேற்​கொண்ட நடவடிக்​கை​கள் மிக​வும் சரி​யானது.

Q

எஸ்​ஐஆர் பணி​கள் மூலம் தகு​தி​யற்ற, இறந்​து​போன வாக்​காளர்​கள் மட்​டுமே தற்​போது நீக்​கப்​பட்​டுள்​ள​தாக தெரி​கிறது. ஆனால், இதில் ஆரம்​பம் முதலே தேவையற்ற பதற்​றத்தை திமுக உரு​வாக்கி வரு​வ​தாக கூறப்​படு​கிறதே?

A

நீங்​கள் ‘பதற்றம்’ என்​ப​தை​விட, ‘விழிப்​புணர்​வு’ என்று சொல்​வது​தான் சரி​யாக இருக்​கும். திமுகவைப் பொறுத்​தவரை பிஎல்​ஏ-2 முகவர்​கள் மூலம் களத்​தில் இறங்கி முழு​மை​யாக பணி​களைச் செய்​துள்​ளோம். பிற கட்​சிகள் ஏதோ பெயரள​வில் செயல்​பட்​டன. ஆனால், திமுக​வினர் வீடு​வீ​டாகச் சென்று ஆய்வு செய்​தனர். அதன்​பல​னாகவே எஸ்​ஐஆர் பணி​கள் சரி​யாக நடை​பெற்று வரு​கின்​றன. ஆவணங்​கள் இல்​லாத எளிய மக்​களிடம் அதி​காரி​கள் கடுமை காட்​டும்​போது, அவர்​களின் வாக்​குரிமை பறி​போகும் அபாய​முள்​ளது. இதை​தான் நாங்​கள் சுட்​டிக்​காட்​டினோம்.

Q

தமி​ழ​கத்​தைப் பொறுத்​தவரை இன்​னும் குற்​றச் சம்​பவங்​கள் பெரிய அளவில் குறைய​வில்லை என்று எதிர்க்​கட்​சிகள் தொடர்ந்து குற்​றம் சாட்​டு​கி​றார்​களே?

A

தமி​ழ​கத்​தில் ஆதா​யத்​துக்​காக நடை​பெறும் கொலை​கள் குறைவு​தான். முன்​விரோதம் மற்​றும் தனிபட்ட காரணங்​களால்​தான் அதிக குற்​றங்​கள் நடை​பெறுகின்​றன. இதை தடுப்​பது சவாலானது​தான். எனினும் காவல்​துறை சிறப்​பாக செயல்​பட்டு வரு​கிறது.

Q

வன்​னியர் சமூகத்​துக்கு தனி இடஒதுக்​கீடு வழங்​கு​வ​தில் திமுக​வின் நிலைப்​பாடு என்ன? திமுக தொடர்ந்து ஏமாற்றி வரு​வ​தாக பாமக தலை​வர் அன்​புமணி குற்​றம்​சாட்​டு​கி​றாரே?

A

கடந்த அதி​முக ஆட்​சி​யில் தேர்​தலுக்​காக கடைசி நேரத்​தில் அவசர, அவசர​மாக 10.5 சதவீத உள் இடஒதுக்​கீடு கொண்டு வரப்​பட்​டது. ஆனால், முறை​யான தரவு​கள் இல்​லாமல் அமல் செய்​யப்​பட்​ட​தால் நீதி​மன்​றம் அதை ரத்து செய்​தது. இதை உச்ச நீதி​மன்​ற​மும் உறுதி செய்​தது. இதனால் முறை​யான தரவு​களை சேகரித்​து, சட்​டரீ​தி​யாக சிக்​கல் வரா​த​படி இடஒதுக்​கீட்டை கொண்​டுவர முயற்​சித்து வரு​கி​றோம். சாதி​வாரி கணக்​கெடுப்பை மத்​திய அரசு​தான் எடுக்க முடி​யும். இதை தெரிந்தே பாமக அரசி​யல் செய்​கிறது. திமுக சமூகநீதி அடிப்​படை​யில் அனை​வ​ருக்​கும் உரிய இடஒதுக்​கீடு கிடைப்​பதை உறுதி செய்​யும்.

Q

தவெக தலை​வர் புதுச்​சேரி மாநாட்​டில் பேசும்​போது, திமுகவை நம்​பாதீர்​கள்; அவர்​கள் நம்​ப​வைத்து ஏமாற்றி விடு​வார்​கள் என்று விமர்​சனம் செய்​துள்​ளாரே?

A

திமுகவை நம்பி வாக்​களித்த மக்​களுக்​கு, எல்லா திட்​டங்​களை​யும் செய்​துதரும் ஆட்​சி​யாக உள்​ளது. தமிழக மக்​கள் எங்​கும் ஏமாற​வில்​லை, யாரிட​மும் ஏமாற​வில்​லை. மாறாக தமிழக மக்​கள் ஒரு நாடக கூட்​டத்​திடம் ஏமாந்​து​விடக்​கூ​டாது. குறிப்​பாக இளைய சமூகம், புரிதல் இல்​லாமல் ஏமாந்​து​விடக்​கூ​டாதுனு தான் நாங்​கள் அச்​சப்​படு​கி​றோம்.

Q

திமுக​வின் நான்​கரை ஆண்டு சாதனை​கள் என்​னென்ன? மக்​கள் மீண்​டும் ஏன் திமுக​வுக்கு வாக்​களிக்க வேண்​டும்?

A

திரா​விட மாடல் என்​பது வெறும் முழக்​கம் அல்ல. அது உள்​ளடக்​கிய வளர்ச்​சி. மகளிர் உரிமைத் தொகை திட்​டம், விடியல் பயணம், காலை உணவுத் திட்​டம் உட்பட பல்​வேறு திட்​டங்​கள் தமி​ழ​கத்​தில் உள்ள 2.1 கோடி குடும்ப அட்​டை​தா​ரர்​களில், சுமார் 1.85 கோடி குடும்​பங்​களுக்கு நேரடி​யாக சென்று சேர்ந்​துள்​ளது.

மத்​திய அரசு பல்​வேறு இடையூறுகளை செய்த போதும் சிறந்த ஆட்​சியை வழங்கி வரு​கி​றோம். மேலும், மதம், சாதி உட்பட பாஜக எத்​தனையோ சூழ்ச்​சிகளை செய்​தா​லும், சாதி மதத்தை காட்டி குழப்ப நினைத்​தா​லும், மக்​கள் தி​முக பக்​கமே நிற்​பார்​கள்​. 2026-ல்​ தி​முக கூட்​ட​ணி மாபெரும்​ வெற்​றி பெற்​று மீண்​டும்​ ஆட்​சி அமைக்​கும்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here