அதிமுக போர்வையில் நுழைய முயற்சிக்கும் பாஜக: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

0
19

அதிமுக என்ற போர்​வை​யின் மூலம் மீண்​டும் தமிழகத்​தினுள் நுழைய முயற்​சிக்​கிறது பாஜக என, ஆவடி​யில் நேற்று தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்ட துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் தெரி​வித்​துள்​ளார்.

தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலில் ஆவடி சட்​டப்​பேரவை தொகு​தி​யில் திமுக வேட்​பாள​ராக அமைச்​சர் சா.​மு.​நாசர் போட்​டி​யிடு​கிறார். அவரை ஆதரித்​து, துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் நேற்று ஆவடி மாநக​ராட்சி அலு​வல​கம் அருகே பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​டார்.

உதயநிதி ஸ்டா​லின் பேசி​ய​தாவது: திமுக இளைஞரணி தொடங்​கப்​பட்ட காலத்​தில், திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லினுக்கு உற்​றத் துணை​யாக இருந்​தவர் சா.​மு.​நாசர்.

திமுக முதன் முதலாக வெற்றி பெற்ற 1967 தேர்​தலின் போது, பள்ளி மாணவ​னாக வீடு வீடாகச் சென்று உதயசூரியன் சின்​னத்​துக்கு வாக்கு சேகரித்​தவர் சா.​மு.​நாசர். அப்​படிப்​பட்ட பெருமை வாய்ந்த சா.​மு.​நாசருக்​கு, தேர்​தலில் உதயசூரியன் சின்​னத்​தில் வாக்​களிக்க வேண்​டும்.

கட்சி பணி மட்​டுமல்​லாமல், 25 ஆண்டு காலம் பல்​வேறு பொறுப்​பு​களில் இருந்து மக்​கள் பணி​யாற்றி வரும் சா.​மு.​நாசர், ஆவடி நகராட்சி தலை​வ​ராக இருந்​து, ஆவடி​யின் வளர்ச்​சிக்கு உழைத்​தவர். அவர் போட்ட அடித்​தளத்​தில்​தான் ஆவடி தொகு​தி​யையே வளரச்ச்சிப் பாதை​யில் கொண்டு சென்​றுள்​ளார்.

கடந்த 5 ஆண்​டில், சா.​மு. நாசர் முயற்​சி​யால், ஆவடி மாநக​ராட்​சி​யில் ரூ.13 கோடி மதிப்​பில் பல்​வேறு சாலைகள், ரூ.31 கோடி மதிப்​பில் மழைநீர் வடி​கால்​வாய்​கள், 19 அரசு துணை சுகா​தார நிலை​யங்​கள், 81 ஆயிரம் பேருக்கு வீட்​டுமனை பட்​டாக்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன.

10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்​பில் சென்​னை அண்​ணாநகர் முதல், நெமிலிச்​சேரி வரை மெட்ரோ ரயில் திட்​டம் விரிவுப்​படுத்​தப்பட உள்​ளது. ஆவடி​யில் புதிய பேருந்து நிலை​யம் அமைக்​கப்​பட்டு வரு​கிறது.

கடந்த தேர்​தலில் 55 ஆயிரம் வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற சா.​மு.​நாசரை, இந்த தேர்​தலில் ஒரு லட்​சம் வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெறச் செய்​ய​வேண்​டும்.

திமுக அரசின் திட்​டங்​களால், இந்​தி​யா​வில் வளரும் மாநிலங்​களில் தமிழகம் முதலிடத்​தில் உள்​ளது. மத்​திய அரசின் நிதி நிலை அறிக்​கை​யில் தமிழகத்​துக்கு என, எந்த திட்​ட​மும் இல்​லை, தமிழ்​நாடு என்ற பெயரே இல்​லை.

தமிழகத்தை முழு​மை​யாக புறக்​கணிக்​கும் மத்​திய பாஜக அரசை, தமிழகம் புறக்​கணிக்​கவேண்​டா​மா? தமிழகத்​தில் எப்​படி​யா​வது நுழைய​வேண்​டும் என பாஜக பார்க்​கிறது.

தமிழகத்​தினுள் நேரடி​யாக நுழைய அதிமுக என்ற போர்​வை​யில் முயற்​சிக்​கிறது பாஜக. ஆகவே, அதி​முக​வுக்கு விழுகிற ஒவ்​வொரு ஓட்​டும் பாஜக​வுக்கு விழுகிற ஓட்டு என்​பதை மக்​கள் மனதில் வைத்​துக்​கொள்ள வேண்​டும். இவ்​வாறு அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here