இந்தியாவின் கருத்து மீது பாஜக தாக்குதல் நடத்துகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

0
100

இந்தியாவின் கருத்து மீது ஆளும் பாஜக தாக்குதல் நடத்துகிறது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் சமூக வலைதளத்தில் நேற்று ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அதில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசும்போது, “இந்தியாவின் கருத்து இன்று தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. அது பாஜகவின் சித்தாந்தத்தால் தாக்கப்படுகிறது. இந்தியாவின் செல்வம் கோடிக்கணக்கான இந்தியர்களிடமிருந்து பறிக்கப்பட்டு, பிரதமருக்கும் பாஜகவுக்கும் நெருக்கமான ஒரு சில தொழிலதிபர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. விலைவாசி உயர்ந்து வருகிறது. இதை எதிர்த்துதான் போராடுகிறோம். இந்த சண்டை இரு வேறு சித்தாந்தங்களுக்கு இடையிலானது. இரு அரசியல் அமைப்புகளுக்கு இடையிலானது அல்ல. இந்தியாவின் கருத்தை பாதுகாக்கவே இந்த போராட்டம் நடைபெறுகிறது” என்றார்.

முன்னதாக, ராகுல் காந்தி அடிக்கடி வியட்நாம் நாட்டுக்கு ரகசியமாக பயணம் செய்வது ஏன் என பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் நேற்று முன்தினம் கேள்வி எழுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here