திமுகவை கண்டித்து 2 மாதம் பாஜக தொடர் ஆர்ப்பாட்டம்

0
135

போலி வாக்​குறு​தி​கள் கொடுத்து மக்​களை ஏமாற்​றிய​தாக திமுக ஆட்​சியை கண்​டித்து சட்​டப்​பேரவை தொகு​தி​வாரி​யாக 2 மாதம் தொடர் ஆர்ப்​பாட்​டங்​கள் நடத்​தப்​போவ​தாக தமிழக பாஜக தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து பாஜக சிறு​பான்மை பிரிவு தேசிய செய​லா​ளர் வேலூர் இப்​ராஹிம் மற்​றும் தமிழக பாஜக செய​லா​ளர் வினோஜ் பி.செல்​வம் ஆகியோர் கூறிய​தாவது: கடந்த 4 ஆண்​டு​களில் தமிழக மக்​களை எண்​ணற்ற இன்​னல்​களுக்கு உள்​ளாக்​கியதோடு மட்​டுமல்​லாமல், மீண்​டும் கவர்ச்சிகர​மான போலி வாக்​குறு​தி​கள், வாக்​காளர்​களுக்கு பணத்தை வாரி இரைப்​பது போன்ற நடவடிக்​கை​களின் மூல​மாக மீண்​டும் ஆட்​சிக்கு வந்து விடலாம் என்று திமுக கனவு காண்கிறது.

மக்​களை திமுக எப்​படி​யெல்​லாம் ஏமாற்றி வரு​கிறது, இந்த ஆட்​சி​யில் ஏற்​பட்​டுள்ள படு​தோல்வி​கள் என்​னென்ன என்​ப​தையெல்​லாம் மக்​களிடம் எடுத்​துக் கூறு​வது ஜனநாயகத்தை விரும்​பு​கின்ற நம் அனை​வரின் கடமை. அந்தவகை​யில், தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் அறி​வுறுத்​தலின்​படி தமிழகம் முழு​வதும் சட்​டப்​பேரவை தொகுதி வாரி​யாக ஆர்ப்​பாட்​டங்​கள் நடத்த இருக்​கிறோம்.

இதன்​படி அக்​.5-ம் தேதி தொடங்கி நவ.30-ம் தேதி வரை ஆர்ப்​பாட்​டங்​கள் தொடர்ச்​சி​யாக நடத்​தப்பட உள்​ளன. குறிப்​பாக 2011- 2021 கால​கட்​டத்​தில் ஆட்​சியே இல்​லாமல் சோர்​வடைந்து கிடந்த திமுக, அடுத்து ஆட்​சிக்கு வரும் நோக்​கத்​தில் நிறைவேற்ற இயலாத கவர்ச்​சிகர​மான போலி வாக்​குறு​தி​களை தன் போக்​கில் அள்ளி வீசி​யதை​யும், ஆட்​சிக்கு வந்​த​பின் மக்​களை எப்​படி மோசடி செய்​தது என்​ப​தை​யும் எடுத்​துக் கூறும் வித​மாக இந்த ஆர்ப்​பாட்​டங்​கள் அமைய இருக்​கின்றன. இதற்​காக பொறுப்​பாளர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும் இடங்​கள், தேதி, நேரம் பின்​னர் அறிவிக்​கப்​படும்​. இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here