கரூர் நெரிசல் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை: பாஜக கூட்டணி எம்.பி.க்கள் குழு வலியுறுத்தல்

0
13

கரூர் சம்​பவம் தொடர்​பாக பதவி​யில் உள்ள உச்ச நீதி​மன்ற நீதிபதி தலை​மை​யில் விசா​ரணை நடத்த வேண்​டும் என்று பாஜக கூட்​டணி எம்​.பி.க்​கள் குழு தெரி​வித்​துள்​ளது. கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் தொடர்​பாக விசா​ரிக்​க​வும், உயி​ரிழந்​தோர் குடும்​பத்​தினருக்கு ஆறு​தல் தெரிவிக்​க​வும் பாஜக எம்​.பி.க்​கள் ஹேம​மாலினி, அனு​ராக் தாக்​கூர், தேஜஸ்வி சூர்யா மற்​றும் கூட்​ட​ணிக் கட்சி எம்​.பி.க்​கள் என 8 பேர் கொண்ட குழுவை அமைத்​து, பாஜக தேசி​யத் தலை​வர் ஜே.பி. நட்டா உத்​தர​விட்​டார்.

அதன்​படி, ஹேம​மாலினி தலை​மையி​லான குழு​வினர் நேற்று கரூர் வந்​தனர். அவர்​கள், வேலு​சாமிபுரத்​தில் சம்பவ இடத்தை ஆய்வு செய்​ததுடன், உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினரை​யும், காயமடைந்து மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வருபவர்​களை​யும் சந்​தித்து ஆறு​தல் கூறினர்.

பின்​னர், எம்​.பி.க்​கள் ஹேம​மாலினி, அனு​ராக் தாக்​கூர் ஆகியோர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: இந்த சம்​பவத்​தில் உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினரை சந்​தித்​த​போது, அவர்​கள் கூறு​வதைக் கேட்டு தாங்க முடி​யாத வேதனை ஏற்​பட்​டது. நிகழ்ச்​சிக்கு ஏற்​பாடு செய்​யும் அரசி​யல் கட்​சி​யினர் சரி​யான இடங்​களை தேர்வு செய்​ய​வேண்​டும்.

மிக​வும் குறுகிய இடத்​தில் 30 ஆயிரம் பேர் கூடி​யுள்​ளனர். ஆனால், மாவட்ட நிர்​வாகம் என்ன செய்​தது? காவல் துறை என்ன செய்​தது? நிகழ்ச்​சிக்கு ஏற்​பாடு செய்​தவர்​கள் என்ன செய்​தார்​கள் என பல்​வேறு கேள்வி​கள் எழுகின்​றன. மிகக் குறுகிய சாலை​யில் அனு​மதி வழங்​கியது தவறு.

விஜய் பேசிக் கொண்​டிருந்​த​போது காலணி, பாட்​டில்​கள் வீசி​ய​தாக​வும், ஜெனரேட்​டர் இயங்​காமல் மின்​சா​ரம் துண்​டிக்​கப்​பட்​ட​தாக​வும் கூறுகின்​றனர். இதற்கு ஆளுங்​கட்​சி​யான திமுக அரசும், நிகழ்​வுக்கு ஏற்​பாடு செய்​தவர்​களும் பதில் அளிக்க வேண்​டும்.

இந்த சம்​பவம் தொடர்​பாக, தற்​போது பதவி​யில் உள்ள உச்ச நீதி​மன்ற நீதிபதி தலை​மை​யில் விசா​ரணை நடத்த வேண்​டும். சுதந்​திர​மான, நியாய​மான முறை​யில் விசா​ரணை நடத்​தி, உண்​மையை வெளிக்​கொணர வேண்​டும். இந்த சம்​பவம் தொடர்​பாக நாங்​கள் 8 கேள்வி​களை எழுப்​பி, விசா​ரணை அதி​காரி​களிட​மும், நிகழ்ச்சி ஏற்​பாட்​டாளர்​களிடமும் வழங்க உள்​ளோம்.

ஒரு வாரத்​துக்​குள் பதிலை பெற்​று, அதில் உள்ள தகவல்​களை​யும், பாதிக்​கப்​பட்​டோர் தெரி​வித்த கருத்​துகளை​யும் அடிப்​படை​யாகக் கொண்டு அறிக்கை தயாரித்து பாஜக தலை​மை​யிடம் வழங்​கு​வோம். இவ்​வாறு அவர்​கள் கூறி​னர். மத்​திய இணை அமைச்​சர் எல்​.​ முரு​கன், பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், முன்​னாள் மாநிலத் தலை​வர் அண்​ணா​மலை
உள்​ளிட்​டோர் உடனிருந்​தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here