பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ்: நியூஸிலாந்தை வீழ்த்தியது இந்திய அணி

0
19

பில்லி ஜீன் கிங் கோப்​பைக்​கான ஆசி​யா-ஓசியானா குரூப் 1 டை போட்டி டெல்​லி​யில் நடை​பெற்று வரு​கிறது. இதில் இந்திய அணி தனது முதல் ஆட்​டத்​தில் நேற்று முன்​தினம் தாய்​லாந்தை எதிர்த்து விளை​யாடியது.

இதில் ஒற்​றையர் பிரி​வில் இந்​தி​யா​வின் வைஷ்ணவி அட்கர் 1-6, 3-6 என்ற செட் கணக்​கில் அஞ்​சிசா சாண்டாவிடம் தோல்வி அடைந்​தார். இதன் பின்​னர் மழை காரண​மாக எஞ்​சிய போட்​டிகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. இந்த ஆட்​டங்​கள் நேற்று நடை​பெற்​றன. 2-வதாக நடை​பெற்ற ஒற்​றையர் ஆட்டத்தில் இந்​தி​யா​வின் சஹஜா யாமளப்​பள்ளி 4-6, 6-1, 4-6 என்ற செட் கணக்​கில் பட்​சரின் சீப்​சண்​டேஜிடம் தோல்வி அடைந்​தார்.

கடைசி​யாக நடை​பெற்ற இரட்​டையர் ஆட்​டத்​தில் இந்தியா​வின் ருதுஜா போஸ்​லே, அங்​கிதா ரெய்னா ஜோடி 6-3, 6-4 என்ற செட் கணக்​கில் தாச​போர்ன் நக்​லோ, பியாங்டார்ன் பிளிபுயெச் ஜோடியை வீழ்த்தி ஆறு​தல் வெற்​றியை பெற்​றது. முடி​வில் இந்த மோதலில் இந்​திய அணி 1-2 என்ற கணக்​கில் தோல்வி அடைந்​தது.

இதைத் தொடர்ந்து இந்​திய அணி தனது 2-வது மோதலில் நியூஸிலாந்​துடன் விளை​யாடியது. இதில் ஒற்​றையர் பிரிவு ஆட்​டங்​களில் வைஷ்ணவி அட்​கர் 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்​கில் ஐஷி தாஸை​யும், சஹஜா யாமளப்​பள்ளி 6-1, 6-3 என்ற செட் கணக்​கில் வெலன்​டினா இவானோவை​யும் வீழ்த்​தி​னார். இரட்​டையர் பிரி​வில் இந்​தி​யா​வின் ருதுஜா போஸ்​லே, அங்​கி​தா​ரெய்​ஜோடி 6-4, 6-2 என்ற செட் கணக்கில் மோனிக் பார்​ரி, எரின் ரவுட்​லிஃப் ஜோடியை தோற்​கடித்​தது. இதன் மூலம் இந்த மோதலில் இந்​திய அணி 3-0 என வெற்றி பெற்​றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here