Home தேசிய செய்திகள் பிஹார் கல்லூரி முதல்வர்கள் குலுக்கல் முறையில் தேர்வு

பிஹார் கல்லூரி முதல்வர்கள் குலுக்கல் முறையில் தேர்வு

0

பிஹாரின் பாட்னா பல்கலைக்கழகத்தின் கீழ் மகத் மகளிர் கல்லூரி, பாட்னா கல்லூரி, பாட்னா அறிவியல் கல்லூரி, வனிஜா மகாவித்யாலயா, பாட்னா சட்டக் கல்லூரி ஆகிய 5 கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக இருந்தன.

புதிய முதல்வர்களை தேர்வு செய்வதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. குறிப்பாக அரசியல் ரீதியாக அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து குலுக்கல் முறையில் புதிய முதல்வர்களை தேர்வு செய்ய ஆளுநர் மாளிகை முடிவு செய்தது.

இதன்​படி அண்​மை​யில் குலுக்​கல் நடத்​தப்​பட்​டது. ஒவ்​வொரு கல்​லூரிக்​கும் தகு​தி​யுள்ள பேராசிரியர்​களின் பெயர்​கள் எழுதப்​பட்ட காகித சீட்​டு​கள் ஒரு பாட்​டிலில் போடப்​பட்​டன. அதில் இருந்து குலுக்​கல் முறை​யில் ஒரு காகித சீட்டு எடுக்​கப்​பட்​டது.

இதன்​படி மகத் மகளிர் கல்​லூரி முதல்​வ​ராக நாகேந்​திர பிர​சாத் வர்​மா, பாட்னா கல்​லூரி முதல்​வ​ராக அனில் குமார், பாட்னா அறி​வியல் கல்​லூரி முதல்​வ​ராக அல்​கா, வனிஜா மகா​வித்​யாலயா கல்​லூரி முதல்​வ​ராக சுகாலி மேத்​தா, பாட்னா சட்​டக் கல்​லூரி முதல்​வ​ராக யோகேந்​திர குமார் வர்மா ஆகியோர் தேர்வு செய்​யப்​பட்​டனர். குலுக்கல் முறைக்கு ராஷ்டிரிய ஜனதா தளம் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள்​ கடும்​ எதிர்ப்​பு தெரிவித்​துள்​ளன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version