பிக் பாஸ் சீசன் 9 தொடக்கம்: போட்டியாளர்களின் முழு பட்டியல்!

0
18

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் தொடங்கியுள்ளது.

தமிழில் மிக பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று ‘பிக்பாஸ்’. கடந்த 2017 முதல் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். 7 சீசன்கள் வரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தனிப்பட்ட காரணங்களால் விலகவே, கடந்த 8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார்.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் இன்று (அக்.5) முதல் தொடங்கியுள்ளது. இந்த சீசனையும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். இதற்காக கடந்த சில மாதங்களாகவே போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன. இன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒவ்வொருவருவராக விஜய் சேதுபதி மேடைக்கு அழைத்து அறிமுகப்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில், திவாகர், ஆரோரா சின்க்ளேர், எஃப்ஜே, விஜே பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, பிரவீன், அகோரி கலையரசன், கமருத்தீன், ‘விக்கல்ஸ்’ விக்ரம், நந்தினி, அப்சரா, சுபிக்‌ஷா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இவர்கள் ஒவ்வொருவருக்கு இவர்களை பற்றிய சிறு அறிமுக வீடியோ ஒன்று வழக்கம்போல ஒளிபரப்பப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here