Home சினிமா செய்திகள் பாஸ்கர் சக்தியின் ‘ரயில்’ திரைப்படம் ஜூன் 21-ல் ரிலீஸ்!

பாஸ்கர் சக்தியின் ‘ரயில்’ திரைப்படம் ஜூன் 21-ல் ரிலீஸ்!

0

பாஸ்கர் சக்தி இயக்கியுள்ள ‘ரயில்’ திரைப்படம் வரும் ஜூன் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, படத்தின் தலைப்பு மாற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

‘வெண்ணிலா கபடி குழு’, ‘எம்மகன்’, ‘நான் மகான் அல்ல’ உட்பட பல படங்களுக்கு வசனம் எழுதியிருக்கும் பாஸ்கர் சக்தி, தேசிய விருதுபெற்ற ‘அழகர்சாமியின் குதிரை’ படத்துக்கு கதை, வசனம் எழுதியிருந்தார். அவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘வடக்கன்’. இதில் குங்குமராஜ், வைரமாலா ஜோடியாக நடித்துள்ளனர். ரமேஷ் வைத்யா, பர்வேஸ் மெஹ்ரூ, சமிரா என பலர் நடித்துள்ள இந்தப் படத்தை டிஸ்கவரி சினிமாஸ் சார்பில் மு.வேடியப்பன் தயாரித்துள்ளார். எஸ்.ஜே.ஜனனி இசையமைத்துள்ள இப்படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதன் டீஸர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிடும் இப்படத்தின் தலைப்புக்கு சென்சார் போர்டு எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் ‘வடக்கன்’ என தலைப்பிடப்பட்டிருந்த இப்படம் சென்சார் போர்டு எதிர்ப்பு காரணமாக ‘ரயில்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது படம் வரும் ஜூன் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version