பாரதியார் நினைவு நாள் | ஆளுநர், அமைச்சர்கள் மரியாதை: பாரதியார் சங்கம் சார்பில் பாரதி சுடர் விருது

0
206

பாரதியார் நினைவு நாள் நேற்றுஅனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கிண்டியில் உள்ளஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அங்குள்ள பாரதியார்சிலைக்கு கீழே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பாரதியார் உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழக அரசு சார்பில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள பாரதியார் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், பி.கே.சேகர்பாபு, செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் இரா.வைத்தியநாதன் உள்ளிட்டோர் மலர்தூவி மரி யாதை செலுத்தினர்.பாரதியார் சங்கம், சென்னைபாரதிய வித்யா பவன், கிருஷ்ணா ஸ்வீட்ஸ், விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம், தமிழியக்கம், சிவசங்கரி சந்திரசேகரன் அறக்கட்டளை, நல்லி சில்க்ஸ், டாக்டர்கே.ஜி.கண்ணப்பன் வாசுகி அறக்கட்டளை, மறைமலை அடிகளார் அறக்கட்டளை, முத்தமிழ்க் காவலர்கி.ஆ.பெ.விசுவநாதம் நினைவு அறக்கட்டளை சார்பில் மயிலாப்பூரில் உள்ள சென்னை பாரதிய வித்யா பவனில் பாரதியார் சங்கத்தின் 75-ம் ஆண்டு விழாவும், பாரதியாரின் 103-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியும் பாரதியார் சங்கத் தலைவர் உலகநாயகி பழனி தலைமையில் நடைபெற்றது.இதில், விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன், தொழிலதிபர் நல்லி குப்புசாமி, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் ம.முரளிஉள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். தமிழறிஞர்கள் 103 பேருக்கு பாரதிச் சுடர்விருது வழங்கப்பட்டது.

சென்னை பாரதி வித்யா பவன்இணை இயக்குநர் கே.வெங்கடா சலத்துக்கு பாரதி நுண்கலை விருதும், நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி முதல்வர் அ.லூயீஸ் ஆரோக்கியராஜ், எழும்பூர் எத்திராஜ் மகளிர்கல்லூரி முதல்வர் எஸ்.உமாகவுரி, அரும்பாக்கம் டிஜி வைஷ்ணவ கல்லூரி முதல்வர் எஸ்.சந்தோஷ்பாபு, நுங்கம்பாக்கம் எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி அர்ச்சனா பிரசாத், போரூர்ஆல்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ஆ.சிவசங்கர் ஆகியோருக்கு பாரதி கல்விச் சுடர் விருதும் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here