​கால் இறு​தி​யில் பாம்ப்ரி, கோரன்​சன் ஜோடி

0
18

அமெரிக்​கா​வின் இந்​தி​யன் வெல்ஸ் நகரில் இந்​தி​யன் வெல்ஸ் மாஸ்​டர்ஸ் டென்​னிஸ் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆடவர் இரட்​டையர் பிரிவில் கால் இறு​திக்கு முந்​தைய சுற்​றில் இந்​தி​யா​வின் யுகி பாம்ப்ரி, சுவீடனின் ஆண்ட்ரே கோரன்​சன் ஜோடி, செக்​குடியரசின் ஜிரி லெஹெக்​கா, நெதர்​லாந்​தின் சாண்டர் அரெண்ட்ஸ் ஜோடியை எதிர்த்து விளை​யாடியது.

ஒரு மணி நேரம் 14 நிமிடங்​கள் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் யுகி பாம்ப்​ரி, ஆண்ட்ரே கோரன்​சன் ஜோடி 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்​கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்​னேறியது. கால் இறுதி சுற்​றில் பாம்ப்​ரி, கோரன்​சன் ஜோடி​யானது ஆஸ்​திரி​யா​வின் அலெக்சாண்டர் எர்​லர், இத்​தாலி​யின் ஆண்ட்​ரியா வவாசோரி ஜோடியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here