Home சினிமா செய்திகள் ரீரிலீஸ் பட்டியலில் இணையும் ‘பகவதி’

ரீரிலீஸ் பட்டியலில் இணையும் ‘பகவதி’

0

விஜய் நடித்த ‘பகவதி’ திரைப்படம் ரீரிலீஸ் ஆகவுள்ளது. மார்ச் 21-ம் தேதி ஆர்யா நடித்து பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பாஸ் (எ) பாஸ்கரன்’ படம் வெளியாகவுள்ளது. தற்போது அப்படத்துடன் வெளியாகவுள்ளது ‘பகவதி’.

2002-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் ‘பகவதி’. லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வெங்கடேஷ் இயக்கத்தில் உருவான படம் ‘பகவதி’. விஜய், ஜெய், ரீமா சென், வடிவேலு, ஆசிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

தேவா இசையமைப்பில் உருவான இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. மேலும், காமெடி காட்சிகளும் கொண்டாடப்பட்டது. ஆனால், ‘பகவதி’ படம் வசூல் ரீதியில் போதிய வரவேற்பைப் பெறவில்லை. அச்சமயத்தில் உருவான விஜய் படங்களுள் அதிக பொருட்செலவில் தயாரான படம் ‘பகவதி’ என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version