ஐபிஎல் பயிற்சிகளுக்கு பிசிசிஐ கிடுக்கிப்பிடி

0
9

ஐபிஎல் கிரிக்​கெட் திரு​விழா வரும் 28-ம் தேதி பெங்​களூரு​வில் கோலாகல​மாக தொடங்​கு​கிறது. இதையொட்டி இந்​தத் தொடரில் கலந்து கொள்​ளும் அனைத்து அணி​களும் கடந்த சில வாரங்​களாக தீவிர பயிற்​சி​யில் ஈடு​பட்டு வரு​கின்​றன.

இந்​நிலை​யில் இந்​திய கிரிக்​கெட் கட்​டுப்​பாட்டு வாரி​யம் (பிசிசிஐ), ஐபிஎல் அணி​களுக்​கான பயிற்சி வழிகாட்டுதல்களை அறி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக அனைத்து அணி​களுக்​கும் 5 பக்​கங்​கள் கொண்ட வழிகாட்டு நெறி​முறை​களை பிசிசிஐ அனுப்பிவத்துள்ளது. இதன்​படி எதிரணி​கள் தங்​களது வலைப்பயிற்சி​யின் போது பயன்​படுத்​திய அதே பயிற்சி ஆடு​களத்​தில் மற்ற அணி​கள் இனி பயிற்சி பெற அனு​மதி கிடை​யாது.

ஒவ்​வொரு அணி​யும் தங்​களுக்கு ஒதுக்​கப்​பட்ட பயிற்சி நேரத்​தில் புதிய வலை பயிற்சி ஆடு​களத்​திலேயே விளையாட வேண்​டும். இரண்டு அணி​கள் அடுத்​தடுத்து பயிற்சி மேற்​கொண்​டால், முதல் அணி பயன்​படுத்​திய வலைகளை இரண்​டாவது பயிற்சி பெறும் அணி பயன்​படுத்​தக்​கூ​டாது. இந்​தத் தடை ‘த்​ரோட​வுன்’ மற்​றும் ‘ரேஞ்ச்​-ஹிட்​டிங்’ பயிற்​சிகளுக்​கும் பொருந்​தும்.

ஒரு அணி தனது பயிற்​சியை முன்​கூட்​டியே முடித்​துக்​கொண்​டாலும், மற்​றொரு அணி அந்​தப் பயிற்சி ஆடுகளத்தைப் பயன்​படுத்த அனு​மதி கிடை​யாது. பிரதான மைதானத்​தின் மையப்​பகு​தி​யில் பயிற்​சிப் போட்டிகளை நடத்​தக்​கூ​டாது என்​ப​தை​யும் பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ளது.

ஆடு​களத்​தைத் தயார் செய்​யும் நோக்​கில், சம்​பந்​தப்​பட்ட அணி​யின் முதல் உள்​ளூர் போட்​டிக்கு முந்​தைய 4 நாட்களில், மையப்​பகு​தி​யில் எந்​த​விதப் பயிற்சியோ அல்லது பயிற்​சிப் போட்​டிகளோ நடத்​தக்​கூ​டாது இந்​தக் காலக்​கட்​டத்​தில், அந்த அணி வேண்​டு​கோள் விடுத்​தால், மாநில கிரிக்​கெட் சங்​கம் அந்த அணிக்கு எந்​த​விதக் கட்டண​முமின்றி மாற்​றுப் பயிற்சி மைதானத்தை ஏற்​பாடு செய்து தர வேண்​டும் என்​றும் பிசிசிஐ தெரி​வித்​துள்​ளது.

வரும் 16-ம் தேதி முதல், சீசனின் தொடக்க ஆட்​டத்​துக்கு முன்​ன​தாக வரை அணிகளுக்கு பயிற்சி பகு​தி​யில் இரண்டு வலை பயிற்சி ஆடு​களங்​களும், பிர​தான மைதானத் தில் ‘ரேஞ்ச் ஹிட்​டிங்’ பயிற்​சிக்​காக ஒரு வலை ஆடு​கள​மும் வழங்​கப்​படும்​ எனவும்​ தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here